இந்த விதை இருந்தால் இனி வீட்டிலேயே நேச்சுரல் ஹேர் டை ரெடி பண்ணலாம்!! இவை முடியை நிரந்தரமாக கருமையாக்கும்!!

0
222
#image_title

இந்த விதை இருந்தால் இனி வீட்டிலேயே நேச்சுரல் ஹேர் டை ரெடி பண்ணலாம்!! இவை முடியை நிரந்தரமாக கருமையாக்கும்!!

உங்கள் தலையில் உள்ள வெள்ளை முடி நிரந்தரமாக கருமையாக கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை முறையை ட்ரை பண்ணவும்.

தேவைப்படும் பொருட்கள்:-

1)ஆளி விதை
2)ஆலிவேரா ஜெல்
3)வைட்டமின் இ மாத்திரை

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றவும்.தண்ணீர் சூடானதும் 2 தேக்கரண்டி ஆளி விதை சேர்த்து கொதிக்க விடவும்.

தண்ணீர் ஜெல் பதத்திற்கு வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.அதன் பின்னர் ஆளி விதை தண்ணீரை நன்கு ஆறவிடவும்.பிறகு இதை ஒரு கிண்ணத்திற்கு வடிகட்டி கொள்ளவும்.

பிறகு ஒரு கற்றாழை மடலை தோல் நீக்கி விட்டு அதன் ஜெல்லை தனியாக பிரித்து எடுத்துக் கொள்ளவும்.இந்த ஜெல்லை 3 முதல் 4 முறை அலசி சுத்தம் செய்து மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.இந்த ஜெல்லை ஆளிவிதை விதை தண்ணீரில் போட்டு கலந்து கொள்ளவும்.

அதன் பின்னர் அதில் 2 வைட்டமின் இ மாத்திரையை போட்டு கலந்து விடவும்.இதை தலை முழுவதும் அப்ளை செய்து ஒரு மணி நேரம் ஊறவிட்டு பின்னர் தலையை அலசி சுத்தம் செய்யவும்.

இவ்வாறு வாரம் இருமுறை செய்து வந்தால் தலையில் உள்ள வெள்ளை முடி நாளடைவில் கருமையாகும்.

Previous articleஅடிக்கும் வெயிலுக்கு ஒரு கிளாஸ் மோர் குடித்தால் உடல் சும்மா ஜில்லுனு இருக்கும்!!
Next articleகோயில் பிரகாரத்தை எத்தனை முறை சுற்ற வேண்டும்? இதனால் கிடைக்கும் பலன் என்ன என்று தெரியுமா?