இதன் அருமை தெரிந்தால் கட்டாயம் இதை சாப்பிடாமல் இருக்க மாட்டீர்கள்!! மக்களே இதை மிஸ் பண்ணிடாதீங்க!!

Photo of author

By Rupa

இதன் அருமை தெரிந்தால் கட்டாயம் இதை சாப்பிடாமல் இருக்க மாட்டீர்கள்!! மக்களே இதை மிஸ் பண்ணிடாதீங்க!!

காலை சிற்றுண்டிக்கு அவல் சிறந்த உணவாக இருக்கின்றது.அரிசியை வேகவைத்து தட்டையாக்கி செய்யப்படும் அவலை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ருசித்து சாப்பிடுகின்றனர்.அவல் உப்புமா,அவல் லட்டு,அவல் பாயசம்,அவல் சாதம்,அவல் பொங்கல் என்று பல வகை உணவுகள் அவல் மூலம் செய்யப்படுகிறது.சிவப்பு அவல்,வெள்ளை அவல்,கம்பு அவல்,தினை அவல் என்று நான்கு வகை அவல்கள் கிடைக்கிறது.

மற்ற உணவுகளை காட்டிலும் அவல் உணவுகள் சமைக்க குறைவான நேரமே எடுத்துக் கொள்ளும் என்பதினால் இல்லத்தரசிகளின் முதல் சாய்ஸாக அவல் இருக்கிறது.அவல் எளிதில் செரிமானமாகிவிடும் என்பதினால் அஜீரணக் கோளாறு இருப்பவர்கள் அவலை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.

டயட் இருப்பவர்களுக்கு அவல் சிறந்த உணவாக இருக்கிறது.நீண்ட நேரம் பசி ஏற்படாமல் இருக்க அவல் உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்அவலில் சுமார் 76.9% கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் 23% கொழுப்புகள் மட்டுமே நிறைந்துள்ளது.இதனால் அதிகளவு அவல் எடுத்துக் கொண்டாலும் உடல் எடை கூடாது.இரத்த சர்க்கரை அதிகமாக இருப்பவர்கள் அவல் உணவுகளை எடுத்து கொண்டால் எளிதில் அதன் அளவு குறைந்துவிடும்.

இரும்புச்சத்து குறைபாடு இருப்பவர்களுக்கு அவல் சிறந்த தீர்வாக விளங்குகிறது.இரத்த சோகை பிரச்சனை இருப்பவர்கள்,கர்ப்பிணி பெண்கள் அடிக்கடி அவல் உணவுகளை எடுத்து வரலாம்.மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள் போஹாவை சாப்பிடலாம்.அவல் உடல் சுறுசுறுப்பை அதிகரிக்க உதவுகிறது.