தினந்தோறும் 5 முந்திரி பருப்பு சாப்பிட்டால் உடலில் நடக்கும் மாற்றங்கள் தெரிந்தால் இதை விடவே மாட்டிர்கள்!!

Photo of author

By Rupa

உடலுக்கு ஆரோக்கியம் தரும் உலர் விதைகளில் முந்திரி முதல் இடத்தில் உள்ளது.முந்திரி பழத்தில் இருந்து கிடைக்கும் இந்த பருப்பு வேர்க்கடலை போன்று சுவையாக இருக்கும்.இந்த முந்திரி பருப்பு பொங்கல்,ஸ்வீட்,கேக் போன்றவற்றை அலங்கரிக்க பயன்படுத்தப்படுகிறது.

முந்திரியில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்கள்:

1)புரதம்

2)வைட்டமின்கள்

3)தாதுக்கள்

4)நார்ச்சத்து

முந்திரி பயன்கள்:

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த தினமும் முந்திரி பருப்பு எடுத்துக் கொள்ள வேண்டும்.முந்திரி பருப்பை தினமும் எடுத்துக் கொண்டால் உடல் எடை கூடிவிடும் என்று சிலர் கூறுவார்கள்.ஆனால் அளவாக முந்திரி பருப்பு சாப்பிட்டால் உடலில் பல அற்புத நன்மைகள் நடைபெறும்.

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பொருளாக முந்திரி உள்ளது.முந்திரி பருப்பில் அடங்கியிருக்கும் மெக்னீசியம் கார்போஹைட்ரேட் வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்த உதவுகிறது.

முந்திரி பருப்பில் உள்ள செலினியம் சத்து சருமத்தை பராமரிக்கிறது.முந்திரி பருப்பை வறுத்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை அதிகரிக்கும்.முந்திரி பருப்பு சாப்பிடுவதால் கண்புரை வருவது தடுக்கப்படும்.

ஒற்றை தலைவலி உள்ளவர்கள் முந்திரி பருப்பு சாப்பிட்டு அதன் தீவிரத்தை குறைக்க குறைக்கலாம்.முந்திரியில் உள்ள ஊட்டச்சத்துக்கள் கேன்சர் செல்களை அழிக்கிறது.முந்திரியில் உள்ள பொட்டாசியம் மற்றும் கொழுப்பு அமிலங்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

முந்திரி பருப்பை அரைத்து பாலில் கலந்து பருகி வந்தால் ஆண்மை அதிகரிக்கும்.முந்திரி பால் பருகுவதால் விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகமாகும்.