இந்த விஷயம் தெரிந்தால்.. இனி உருளைக்கிழங்கு தோலை தூக்கி ஏறிய மாட்டீங்க!!

Photo of author

By Divya

இந்த விஷயம் தெரிந்தால்.. இனி உருளைக்கிழங்கு தோலை தூக்கி ஏறிய மாட்டீங்க!!

Divya

If you know this thing.. you will not lift the potato skin anymore!!

உங்கள் அனைவருக்கும் பிடித்த உணவுக் காய்கறிகளில் உருளைக்கிழங்கு முதன்மை இடத்தில் இருக்கிறது.உருளைக்கிழங்கு சில்லி,வறுவல் போன்றவை அசைவ சுவையை ஒத்திருபதால் பெரும்பாலானவர்கள் இதை விரும்பி உண்கின்றனர்.

உருளைக்கிழங்கு குருமா,உருளைக்கிழங்கு மசாலா,கிரேவி என்று வகை வகையான உணவுகளை செய்து உட்கொள்ளும் நாம் அதன் தோலின் மகிமையை தெரிந்து கொள்ளாமல் இருக்கின்றோம்.பொதுவாக உருளைக் கிழங்கின் தோலை நீக்கிய பிறகு தான் சமையல் செய்ய பயன்படுத்துவோம்.

ஆனால் இவ்வாறு தூக்கி வீசும் உருளைக்கிழங்கு தோல் ஏகப்பட்ட நன்மைகளை கொண்டிருக்கிறது என்பதை நாம் அறிய தவறிவிட்டோம்.உருளைக்கிழங்கு தோலில் பொட்டாசியம்,மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.

உருளைக்கிழங்கு தோல் வேகவைத்த தண்ணீரை பருகி வந்தால் இதய ஆரோக்கியம் மேம்படும்.இரத்த அழுத்தப் பிரச்சனை இருப்பவர்களுக்கு உருளைக்கிழங்கு தோலில் தயாரிக்கப்பட்ட பானம் மருந்தாக திகழ்கிறது.

உருளைக்கிழங்கு தோலில் ஆன்டி- ஆக்ஸிடென்ட்கள் நிறைந்து காணப்படுவதால் இதை உணவில் சேர்த்துக் கொண்டால் உடலில் புற்றுநோய் செல்கள் வளர்வது தடுக்கப்படும்.உருளைக்கிழங்கு தோலில் தயாரிக்கப்பட்ட பானத்தை தொடர்ந்து பருகி வந்தால் எலும்பின் ஆரோக்கியம் மேம்படும்.

உருளைக்கிழங்கு தோலை அரைத்து முகத்திற்கு பயன்படுத்தி வந்தால் சரும சுருக்கங்கள் அனைத்தும் நீங்கிவிடும்.முகத்தின் பொலிவு அதிகரிக்க உருளைக்கிழங்கு தோலில் தயாரிக்கப்பட்ட பேஸ்டை முகத்திற்கு பயன்படுத்தலாம்.கண்களை சுற்றியுள்ள கருவளையம் நீங்க உருளைக்கிழங்கு தோல் க்ரீம் பயன்படுத்தலாம்.

உருளைக்கிழங்கு தோல் பானம் தயாரிக்கும் முறை:

முதலில் ஒரு உருளைக்கிழங்கின் தோலை பாத்திரத்தில் போட்டு அலசி சுத்தம் செய்து கொள்ளவும்.பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி உருளைக்கிழங்கு தோலை போட்டு கொதிக்க வைக்கவும்.பிறகு இந்த பானத்தை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி தேன் கலந்து பருகவும்.