எந்த கிழமையில் எந்த எண்ணெயில் தீபம் ஏற்றினால் வேண்டுதல் பலிக்கும்..!!

Photo of author

By Divya

எந்த கிழமையில் எந்த எண்ணெயில் தீபம் ஏற்றினால் வேண்டுதல் பலிக்கும்..!!

1)ஞாயிற்றுக் கிழமை – சூரிய பகவானுக்கு நெய், தேங்காய் எண்ணெய் கலந்து தீபம் ஏற்றினால் உங்களின் வேண்டுதல் விரைவில் பலிக்கும். அதேபோல் பால், சர்க்கரை நைவேத்தியம் செய்தால் வாழ்வில் முன்னேற்றத்தை காண முடியும்.

2)திங்கட் கிழமை – சிவ பெருமானுக்கு கோயிலுக்கு சென்று இலுப்பை எண்ணெயில் தீபம் ஏற்றினால் உங்களின் வேண்டுதல் விரைவில் பலிக்கும். அதேபோல் பால்,அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை நைவேத்தியம் செய்தால் வாழ்வில் முன்னேற்றத்தை காண முடியும்.

3)செவ்வாய் கிழமை – முருகன் கோயிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றினால் உங்களின் வேண்டுதல் விரைவில் பலிக்கும். அதேபோல் சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் செய்தால் வாழ்வில் முன்னேற்றத்தை காண முடியும்.

4)புதன் கிழமை – விநாயகர் கோயிலுக்கு சென்று தேங்காய் எண்ணெயில் தீபம் ஏற்றினால் உங்களின் வேண்டுதல் விரைவில் பலிக்கும். அதேபோல் கொழுக்கட்டை அல்லது லட்டு நைவேத்தியம் செய்தால் வாழ்வில் முன்னேற்றத்தை காண முடியும்.

5)வியாழக் கிழமை – விஷ்ணு, தட்சிணாமூர்த்திக்கு நல்லெண்ணெயில் தீபம் ஏற்றினால் உங்களின் வேண்டுதல் விரைவில் பலிக்கும். அதேபோல் ரவா புட்டு நைவேத்தியம் செய்தால் வாழ்வில் முன்னேற்றத்தை காண முடியும்.

6)வெள்ளிக்கிழமை – துர்க்கை அம்மனுக்கு நெய், இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய், வேப்ப எண்ணெய், விளக்கு எண்ணெய் கலந்து தீபம் ஏற்றினால் உங்களின் வேண்டுதல் விரைவில் பலிக்கும். அதேபோல் இனிப்பு புட்டு நைவேத்தியம் செய்தால் வாழ்வில் முன்னேற்றத்தை காண முடியும்.

7)சனிக்கிழமை – திருமால், ஆஞ்சநேயருக்கு நல்லெண்ணெயில் தீபம் ஏற்றினால் உங்களின் வேண்டுதல் விரைவில் பலிக்கும். அதேபோல் லட்டு, மிளகு வடை நைவேத்தியம் செய்தால் வாழ்வில் முன்னேற்றத்தை காண முடியும்.