நமது இரத்தத்தில் இருக்கின்ற சர்க்கரை அளவு அதிகரிப்பதால் சர்க்கரை நோய் ஏற்படுகிறது.உணவுமுறை கட்டுப்பாடின்மை,ஆரோக்கியன் இல்லாத வாழ்க்கை முறை உள்ளிட்ட காரணங்கள் சர்க்கரை நோய் உருவாக வழிவகுக்கும்.
சர்க்கரை நோய் அறிகுறிகள்:
1)அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு
2)அளவிற்கு அதிகமாக தாகம் ஏற்படுதல்
3)உடல்’எடை குறைதல்
4)உடல் சோர்வு
5)கண் பார்வை மங்களாதல்
6)உடலில் ஏற்படும் காயங்கள் எளிதில் ஆறாமல் இருத்தல்
இரத்தத்தில் இருக்கின்ற சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும் அருமருந்துகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
அமிர்தவல்லி இலை
இதில் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் அதிகம் நிறைந்திருக்கிறது.இது இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுதுவதோடு உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
அமிர்தவல்லி இலை டீ செய்யும் முறை
தேவையான பொருட்கள்:
1)அமிர்தவல்லி இலை
2)தண்ணீர்
செய்முறை:
ஒரு கைப்பிடி அளவு அமிர்தவல்லி இலையை வெயிலில் நன்கு காய வைத்து பொடியாக்கி கொள்ளவும்.பிறகு இதை ஒரு டப்பாவில் கொட்டி சேமித்துக் கொள்ளவும்.
அதன் பிறகு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 150 மில்லி தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அமிர்தவல்லி இலை பொடி ஒரு தேக்கரண்டி அளவு அதில் போட்டு கொதிக்க விடவும்.இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி குடித்து வந்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும்.
அமிர்தவல்லி இலை கசாயம் தயாரிக்கும் முறை
தேவையான பொருட்கள்:
1)அமிர்தவல்லி இலை
2)இஞ்சி துண்டுகள்
3)மிளகு
4)துளசி இலைகள்
5)அமிர்தவல்லி இலை காம்புகள்
செய்முறை:
பாத்திரம் ஒன்றில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சூடாக்கவும்.இதனிடையே ஒரு சிறிய துண்டு இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.அடுத்து நான்கு மிளகை உரலில் போட்டு இடித்துக் கொள்ளவும்.
பின்னர் 10 துளசி இலைகள் மற்றும் சிறிது அமிர்தவல்லி இலையின் காம்பை உரலில் போட்டு ஒன்றிரண்டாக இடித்து வைத்துக் கொள்ளவும்.
இப்பொழுது தண்ணீர் சூடானதும் நறுக்கிய இஞ்சி துண்டுகளை அதில் போடவும்.பிறகு இடித்த மிளகு,துளசி மற்றும் அமிர்தவல்லி காம்பை போட்டு குறைவான தீயில் ஐந்து நிமிடங்களுக்கு கொதிக்க வைத்து வடிகட்டி குடித்து வந்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும்.