தயிருடன் இந்த இரண்டு பொருட்களை கலந்து தலைக்கு பயன்படுத்தினால் இனி ஒருமுடி கூட கொட்டாது!

Photo of author

By Divya

தயிருடன் இந்த இரண்டு பொருட்களை கலந்து தலைக்கு பயன்படுத்தினால் இனி ஒருமுடி கூட கொட்டாது!

நம்மில் பலருக்கு கூந்தல் கருமையாகவும், அடர்தியாகவும் இருப்பது தான் பிடிக்கும். இதற்கு சிறு வயதில் இருந்து தலை முடி பராமரிப்பில் தனி கவனம் செலுத்த வேண்டும். தலை முடியை பராமரிக்க ஆரோக்கியமற்ற பொருட்களை உண்பது, தலைக்கு பயன்படுத்துவதுமாக இருந்தால் தலை முடி உதிர்தல் தான் ஏற்படும். எனவே அதிக செலவின்றி வீட்டு முறையில் தலை முடி உதிர்வை கட்டுப்படுத்தி அசுர வேகத்தில் வளரச் செய்யுங்கள்.

தேவைப்படும் பொருட்கள்:-

1)தயிர்
2)தேன்
3)கற்றாழை ஜெல்

செய்முறை:-

ஒரு கிண்ணத்தில் சுத்தமான தயிர் 5 தேக்கரண்டி அளவு சேர்க்கவும். அதன் பின்னர் 2 தேக்கரண்டி தூய்மையான தேன் சேர்த்து கலந்து விடவும்.

பிறகு 2 தேக்கரண்டி பிரஷ் கற்றாழை ஜெல் சேர்த்து நன்கு பேஸ்டாக்கி வைத்துக் கொள்ளவும்.

இந்த பேஸ்டை தலை முடிகளுக்கு பயன்படுத்துவதற்கு முன்னர் தலையை நன்கு அலசி காயவைத்து கொள்ளவும்.

பிறகு இந்த பேஸ்டை தலை முழுவதும் அப்ளை செய்து ஒரு மணி நேரத்திற்கு ஊறவிட்டு பிறகு முடியை ஷாம்பு இன்றி அலசவும்.

மறுநாள் மீண்டும் ஷாம்பு பயன்படுத்தி தலையை அலசவும். இவ்வாறு வாரம் ஒருமுறை செய்து வந்தால் தலை முடி ஆரோக்கியமாக வளரும்.