வீட்டு வாடகை இப்படி கொடுத்தால் வாடகை வீடு டூ சொந்த வீட்டிற்கு செல்லும் யோகம் கிடைக்கும்!!

Photo of author

By Divya

வீட்டு வாடகை இப்படி கொடுத்தால் வாடகை வீடு டூ சொந்த வீட்டிற்கு செல்லும் யோகம் கிடைக்கும்!!

*பெரும்பாலானோருக்கு மாதத்தில் முதல் தேதியில் சம்பளப் பணம் வந்துவிடும். இந்நிலையில் உங்கள் கைக்கு சம்பளப் பணம் வந்த மாதத்தின் முதல் நாளே வீட்டு வாடகையை கொடுக்க கூடாது. குறைந்தது 2 நாட்கள் சம்பளப் பணத்தை உங்கள் பணப் பெட்டியில் தங்க வைத்து பின் 3 ஆம் தேதிக்கு மேல் வீட்டு வாடகை கொடுக்கலாம். இவ்வாறு செய்வதன் மூலம் செலவு ஏற்பட்டாலும் ஏதேனும் ஒருவகையில் வரவாக வந்து விடும்.

*வாரத்தில் செவ்வாய்கிழமை அன்று வீட்டு வாடகை கொடுக்க பழங்குங்கள். காலை 6 முதல் 7 மணி, மதியம் 1 முதல் 2 மணிக்கு செவ்வாய் ஓரையில் கொடுக்கலாம். இதன் மூலம் பணக் கஷ்டம் நீங்கி வரவு அதிகரிக்கும்.

மேலும் இவ்வாறு செய்யும் பொழுது எப்படி கடன் அடைகிறேதே அதேபோல் வாடகை கொடுப்பது ஓய்ந்து உங்களுக்கு ஒரு சொந்த வீடு அல்லது நிலம் வாங்கும் யோகம் கூடும். அதேபோல் வங்கி கணக்கில் பணம் செலுத்துவதாக இருந்தாலும் இந்த நேரத்தில் செலுத்தலாம்.

*முக்கியமாக இத்தனை ஆயிரம் ரூபாய் வாடகை கொடுக்க வேண்டி இருக்கே என்று சலித்து கொண்டு வாடகை கொடுக்கக் கூடாது.

இவ்வளவு நல்ல வீடு நாம் தங்குவதற்குக் கொடுத்த இறைவனுக்கும் வீட்டு உரிமையாளருக்கும் மனதார நன்றி மனதிற்குள் சொல்லி வாடகை கொடுக்க வேண்டும். இதை 4 முதல் 5 மாதங்களுக்கு தொடர்ந்து செய்து பாருங்கள். நிச்சயம் மாற்றத்தை உணர்வீர்கள்.