இந்த 3 பொருட்களை கொண்டு தூபம் போட்டால் எப்பேர்ப்பட்ட கண் திருஷ்டியும் நொடியில் அழிந்து விடும்!!

Photo of author

By Divya

இந்த 3 பொருட்களை கொண்டு தூபம் போட்டால் எப்பேர்ப்பட்ட கண் திருஷ்டியும் நொடியில் அழிந்து விடும்!!

உலகம் நவீனமானாலும் கண் திருஷ்டி என்ற ஒற்றை வார்த்தையை கேட்டாலே மனம் பதறும்.கண் திருஷ்டி ஒருவரின் உழைப்பு,வளர்ச்சியை கண்டு பிறர் பொறாமை கொள்வதால் ஏற்படுகிறது.கண் திருஷ்டி பட்டுவிட்டால் எவ்வளவு பெரிய மனிதனும் வாழ்வில் சறுக்கலை சந்திப்பான்.அவனது உழைப்பு அனைத்தும் தீயவர்களால் வீணாகி விடும்.அதுமட்டும் இன்றி கண்திருஷ்டி ஏற்பட்டவர்களை சுற்றி நிறைய எதிர்மறை எண்ணங்கள் உருவாகி விடும்.

கண் திருஷ்டியில் இருந்து முழுமையாக மீள ஆன்மீகத்தில் பல எளிய வழிகள் இருக்கிறது.அதில் ஒன்று தான் மூன்று பொருள் கொண்ட எளிய பரிகாரம்.வெண் கடுகு,இலவங்கம்,பச்சை கற்பூரம் ஆகியவற்றை வைத்து தான் கண் திருஷ்டியை ஒழிக்க கூடிய பரிகாரம் செய்ய வேண்டும்.

இந்த பரிகாரத்தை சனி அல்லது ஞாயிறு அன்று செய்ய வேண்டும்.வீட்டு பூஜை அறையில் உள்ள குலதெய்வ படத்தை துடைத்து மாலை அணிவித்து வணங்கவும்.

அதன் பின்னர் ஒரு ஸ்பூன் வெண் கடுகு,3 இலவங்கம் மற்றும் ஒரு துண்டு பச்சை கற்பூரத்தை கொண்டு சாம்பிராணி தூபம் போட்டு வீடு முழுக்க காட்டவும்.இவ்வாறு செய்வதால் கண் திருஷ்டி,வீட்டில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் அனைத்தும் நீங்கி விடும்.