Kerala Recipe: கேரளா மட்டா அரிசி புட்டு!! பஞ்சு போன்று மிருதுவாக செய்வது எப்படி?

0
86
#image_title

Kerala Recipe: கேரளா மட்டா அரிசி புட்டு!! பஞ்சு போன்று மிருதுவாக செய்வது எப்படி?

புட்டு உணவிற்கு பெயர் பெற்றது கேரளா.இதில் கேரளர்கள் அதிகம் விரும்பி உண்ணும் மட்டா அரிசியில் சுவையான புட்டு செய்வது சொல்லப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:-

1)மட்டா அரிசி – 1 கப்
2)உப்பு – தேவையான அளவு
3)தேங்காய் துருவல் – 1 கப்

செய்முறை:-

ஒரு கப் மட்டா அரிசியை கிண்ணத்தில் போட்டு 2 கப் தண்ணீர் ஊற்றி மூன்று முதல் நான்கு முறை அலசி சுத்தப்படுத்தவும்.

அதன் பின்னர் 2 கப் தண்ணீர் ஊற்றி 4 முதல் 5 மணி நேரத்திற்கு ஊற வைக்கவும்.அதன் பின்னர் அரிசி ஊறவைத்த தண்ணீரை வடித்து விட்டு அரிசியை மிக்ஸி ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.

நைசாக அரைத்தால் புட்டு செய்ய முடியாது.எனவே ரவை பதத்திற்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

ஒரு ஒரு கிண்ணத்தில் கொட்டிக சிறிது தூள் உப்பு சேர்த்து கலந்து விடவும்.அதன் பின்னர் அரை மூடி தேங்காயை துருவி தனியாக வைத்துக் கொள்ளவும்.

பிறகு ஒரு புட்டு மேக்கர் எடுத்து அதில் மட்டா அரிசி மாவு சிறிது போட்டுக் கொள்ளவும்.பிறகு துருவிய தேங்காய் சேர்க்கவும்.அதன் பின்னர் மட்டா அரிசி(புட்டு மாவு)சேர்க்கவும்.இவ்வாறு புட்டு மேக்கரை நிரப்பு அடுப்பில் வைக்கவும்.

புட்டு மேக்கரில் இருந்து ஆவி வந்ததும் அடுப்பை அணைத்து புட்டை ஒரு தட்டிற்கு மாற்றிக் கொள்ளவும்.இந்த மட்டா அரிசி புட்டிற்கு கடலை கறி சிறந்த காமினேஷனாக இருக்கும்.