நீங்கள் மதித்தால் நாங்களும் மதிப்போம் நீங்கள் மிதித்தால் நாங்களும் மிதிப்போம்!! பெங்களூரு புகழேந்தியின் ஆவேச பேச்சு!!

0
34
If you respect we respect and if you trample we trample!! Bengaluru Pugahendi's passionate speech!!
If you respect we respect and if you trample we trample!! Bengaluru Pugahendi's passionate speech!!

நீங்கள் மதித்தால் நாங்களும் மதிப்போம் நீங்கள் மிதித்தால் நாங்களும் மிதிப்போம்!! பெங்களூரு புகழேந்தியின் ஆவேச பேச்சு!!

சேலத்தில் தற்போது முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணியின் கொள்கை பரப்பு செயலாளரான பெங்களூரு புகழேந்தி செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர் கூறி இருப்பதாவது, ஜெயகுமார் கொடநாடு என்பது தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மா உடையது இல்லை என்றும் அது தனியார் எஸ்டேட் என்றும் கூறி உள்ளார்.

ஆனால் தேர்தலில் கொடநாடு எஸ்டேட் தன்னுடைய பெயரில் தான் உள்ளது என்று ஜெயலலிதா அம்மா அவர்கள் தாக்கல் செய்ததை மறந்து விட்டார் போலும்.

அதிமுக பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், சி.வி. சண்முகம் போன்ற குடிகாரர்களை கட்சியில் வைத்துக் கொண்டு ஆட்சி செய்து வருகிறார். இவர் குடி போதையில் அனைவரிடமும் ஏதோ உளறிக் கொண்டு இருக்கிறார்.

இந்த கொடநாடு வழக்கு விரைவாக ஒரு முடிவுக்கு வரும் என்று பெங்களூரு புகழேந்தி கூறி உள்ளார். மேலும், பாஜக என்று ஒரு கட்சி உள்ளதா? அதில் அண்ணாமலை என்பவர் யார் என்று பாஜகவை சேர்ந்த சுப்பிரமணி என்பவர் கேட்கிறார்.

ஆனால் அண்ணாமலை இன்று ஓபிஸ் மற்றும் இபிஎஸ் பற்றி பேசி வருகிறார். எப்போது அன்றைக்கு நடைபெற்ற கூட்டத்திற்கு எங்களை அழைக்கவில்லையோ அப்போதே உங்களுக்கும் எங்களுக்கும் உள்ள உறவுகள் முற்றிலுமாக அழிந்து விட்டது.

நீங்கள் மதித்தால் தான் நாங்களும் மதிப்போம், நீங்கள் மிதித்தால் நாங்கள் மிதிப்போம் என்ற கொள்கையை உடையவர் ஓபிஎஸ். அதிமுக கொடியை நாங்கள் பயன்படுத்தகூடாது என்று கூறினீர்கள், ஆனால் அதிமுகவின் கொடியை பயன்படுத்தி தான் ஆரப்பாட்டத்தை நடத்தினோம். உங்களால் என்ன செய்ய முடிந்தது.

இனிமேல், பாஜக தலைவரான அண்ணாமலை பொதுச் செயலாளர் என்று கடிதம் எழுதினால் அவர்மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மேலும் ஓ. பன்னீர்செல்வம் அவர்களை ஒருங்கிணைப்பாளர் என்றும் அழைக்க வேண்டும் எனவும் ஓபிஎஸ் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் பெங்களூரு புகழேந்தி கூறி உள்ளார்.இவரின் இந்த பேச்சு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

author avatar
CineDesk