308-வது பிறந்தநாள் கொண்டாடும் திருப்பதி லட்டு… 

0
57

 

308-வது பிறந்தநாள் கொண்டாடும் திருப்பதி லட்டு…

 

திருப்பதியில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டு 307வது ஆண்டை கடந்து 308 ஆண்டாக பக்தர்களுக்கு வழங்கபடுவதால் லட்டுக்கு வயது 308 என்று கணக்கிடப்பட்டுள்ளது.

 

தமிழகத்தில் பழனி முருகன் கோவிலுக்கு சென்றால் அங்கு பிரசாதமாக வழங்கப்படுவது பஞ்சாமிர்தம் ஆகும். இந்த பஞ்சாமிர்தம் தமிழகத்தில் மிகவும் பிரபலம். அதிலும் பழனி முருகன் கோவில் பஞ்சாமிர்தம் தனி சுவையாக இருக்கும். அது போல தமிழகத்தில் உள்ள பிரபலமான கோவில்களில் தனித்துவமான பிரசாதங்கள் வழங்கப்படுவது வழக்கம் ஆகும். அது போல ஆந்திரா மாநிலம் திருப்பதியில் திருமலை கடவுளை தரிசிக்க செல்வோருக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்படுகின்றது.

 

இந்த லட்டு ஆந்திர மக்கள் மட்டும் இல்லாமல் இந்தியாவில் உள்ள அனைத்து மக்களுக்கும் பிடித்த பிரசாதமாக இருக்கின்றது. 300 ஆண்டுகளுக்கு முன்னர் திருப்பதி கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கவில்லை. பூந்தியை மட்டும் தான் பிரசாதமாக கோவில் நிர்வாகம் வழங்கி வந்தது. 1715ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2ம் தேதி முதல் பூந்திக்கு பதிலாக பக்தர்களுக்கு லட்டை பிரசாதமாக வழங்கும் நடைமுறை அமலுக்கு வந்தது. அதற்க்கு பின்னர் தற்போது வரை திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு லட்டு பிரசாதமாக கோவிலின் கருவறை அருகே சிறிய அளவில் வழங்கப்பட்டு பின்னர் கோவில் கருவறைக்கு வெளியே டோக்கன் முறையில் லட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

 

2015ம் ஆண்டு திருப்பதி கோவிலில் வழங்கப்படும் லட்டுக்கு புவிசார் காப்புரிமை வழங்கப்பட்டது. இதனால் இந்தியாவில் திருப்பதியை தவிர வேறு எங்கேயும் திருப்பதி லட்டு என்ற பெயரில் லட்டை தயாரித்து வழங்கவோ அல்லது விற்பனை செய்யவோ கூடாது.

 

திருப்பதியில் வழங்கப்படும் லட்டை தயார் செய்வதற்கு என்று 500க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலைக்கு வைக்கப்பட்டுள்ளனர். இதற்காக தனியாக திருப்பதி தேவஸ்தானத்தில் தனியாக செயல்படும் துறையானது திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு தடங்கள் இல்லாமல் பிரசாதம் கிடைப்பதற்கு நாள்தோறும் 350000 லட்டுகளை தயார் செய்து வருகின்றனர்.

 

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மொத்தம் மூன்று விதமான லட்டுகள் தயார் செய்யப்படுகின்றது. அவற்றில் ஒரு லட்டு 175 கிராம் எடை உள்ள லட்டு ஆகும்.175 கிராம் எடை உள்ள லட்டு கவுன்டர்களில் பக்தர்களுக்காக விற்பனை செய்வதற்காக தயார் செய்யப்படுகின்றது.

 

மற்றொரு லட்டு சுமார் 1750 கிராம் எடையில் பெரிய லட்டு தயார் செய்யப்படுகின்றது. மூன்றாவதாக தயார் செய்யப்படும் புரோக்தம் லட்டு நைவேத்தியம் செய்வதற்காக தயாரிக்கப்படுகின்றது.