MRP யை விட அதிக விலைக்கு விற்றால்!! இனி நீங்க செய்ய வேண்டியது இதுதான்!!

MRP யை விட அதிக விலைக்கு விற்றால்!! இனி நீங்க செய்ய வேண்டியது இதுதான்!!

பொதுமக்களாகிய நாம் வாங்கும் அனைத்து பொருட்களிலும் MRP என்ற ஒன்று குறிப்பிடப்பட்டிருக்கும். மேலும் அதில் ஒரு விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கும்.

அப்படி இந்த எம்ஆர்பி என்றால் என்ன என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்,MRP என்பது ஒரு தயாரிப்பு அல்லது சேவையை வாங்குவதற்கு வாடிக்கையாளரிடம் வசூலிக்கப்படும் அதிகபட்ச விலையாகும்.

MRP என்பது ஒரு பொருளின் உற்பத்தி செலவு, போக்குவரத்து மற்றும் உற்பத்தியாளர் அல்லது விற்பனையாளரால் ஏற்படும் பிற செலவுகள் மற்றும் வரிகள் ஆகியவற்றைச் சேர்த்துதான் கணக்கிடப்படுகிறது.

பொதுவாக நாம் வெளியூர் பயணம் மேற்கொள்ளும் போது பேருந்து நிலையங்களில் தின்பண்டங்கள், குளிர் பானங்கள் போன்ற உணவு பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்கிய அனுபவம் நம்மில் பலருக்கும் ஏற்பட்டிருக்கும்.

ஆனால் அதை நாம் எளிதாக கடந்து சென்றுவிடுகிறோம். MRP விலைக்கும் கூடுதலாக பொருட்களை விற்பது, விதிமீறல் மற்றும் ஒரு குற்றமாகும். இதுகுறித்து யாரிடம் புகார் அளிப்பது, எந்த மாதிரியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதை பற்றி இங்கு விரிவாகக் காண்போம்.

நீங்கள் பொருட்கள் வாங்கும் பொழுது எம்ஆர்பி விலையை விட கூடுதல் விலைக்கு பொருட்களை விற்றால் நீங்கள் முதலில் 1800-11-4000 இந்த கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு அழைத்து புகாரை தெரிவிக்கலாம்.

இதனைத் தொடர்ந்து நுகர்வோர் 8800001915 என்ற எண்ணிற்கும் மெசேஜ் செய்தும் புகாரை தெரிவிக்கலாம்.

இது மட்டுமல்லாமல் எங்கு எம்ஆர்பி விலைக்கு கூடுதலாக விற்பனை செய்யப்படுகிறது அந்தக் கடை பில் மற்றும் பொருள் முதலியவற்றை புகைப்படம் எடுத்து 9444042322 என்ற whatsapp எண்ணிற்கு அனுப்பியும் புகாரை தெரிவிக்கலாம்.

இதனோடு கடைக்காரர் எம்ஆர்பியை விட அதிகமாக வசூலித்தால், https://consumerhelpline.gov.in/user/signup.php என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனிலும் புகாரை தெரிவிக்கலாம்.

புகாரி தெரிவித்த இரண்டு வாரங்களுக்குள் சம்பந்தப்பட்ட நபர் மற்றும் நிறுவனம் இரண்டையும் விசாரித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

இதில் நீங்கள் பொருட்கள் தரமாக இல்லை , எக்ஸ்பீரியர் டேட் இல்லை, அளவு குறைவாக உள்ளது, FASSI என்கின்ற என் இல்லை, மேனுஃபேக்சர் டேட் இல்லை, கலப்படம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது என்று அனைத்திற்கும் இவற்றின் மூலம் புகாரை தெரிவிக்கலாம்.

பின்பு உங்களது புகார் குறித்து விசாரணை செய்த பிறகு விதிமீறல் கண்டறியப்பட்டால், கடைக்காரருக்கு அபராதம் விதிக்கப்படலாம். அதிக கட்டணம் வசூலிக்கப்பட்ட தொகைக்கு இழப்பீடு பெற நுகர்வோருக்கும் உரிமை உண்டு.