இந்த விதைகளை ஊறவைத்து சாப்பிட்டால் உடல் சூடு தணிந்து குளுமையாகும்!! 100% அனுபவ உண்மை!
கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்வதால் உடல் சூடும் அதிகரிக்கிறது.இதனால் வியர்க்குரு,சூட்டு கொப்பளம்,அம்மை போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது.இந்த பாதிப்புகள் வராமல் இருக்க உடல் சூடு தணிய கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்திய குறிப்புகளை பின்பற்றி வரவும்.
தீர்வு 01:
1)வெந்தயம்
2)சப்ஜா விதை
3)சீரகம்
செய்முறை:-
ஒரு சுத்தமான கிண்ணத்தில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.பிறகு அதில் 1/4 தேக்கரண்டி வெந்தயம்,1/4 தேக்கரண்டி சீரகம் மற்றும் 1/4 தேக்கரண்டி சப்ஜா விதை சேர்த்து ஒரு இரவு முழுவதும் ஊற விடவும்.
மறுநாள் இந்த விதைகள் ஊற வைத்த நீரை ஒரு கிண்ணத்திற்கு வடிகட்டி குடிக்கவும்.தினமும் காலை நேரத்தில் டீ,காபிக்கு பதில் இந்த விதை நீரை குடித்து வந்தால் உடல் சூடு முழுமையாக தணியும்.
தீர்வு 02:-
தேவையான பொருட்கள்:-
1)துளசி விதை
2)எலுமிச்சை சாறு
செய்முறை:-
ஒரு கிண்ணத்தில் 1/2 தேக்கரண்டி துளசி விதை போட்டு ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி ஒரு இரவு ஊற வைக்கவும்.மறுநாள் இந்த நீரை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து குடித்தால் உடல் சூடு குறையும்.
தீர்வு 03:-
தேவையான பொருட்கள்:-
1)புதினா இலை
2)எலுமிச்சை சாறு
செய்முறை:-
ஒரு கிண்ணத்தில் ஒரு கிளாஸ் குளிர்ந்த நீர் ஊற்றி இரண்டு புதினா இலை மற்றும் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து குடித்தால் உடல் சூடு முழுமையாக தணியும்.