மோரை இப்படி பயன்படுத்தினால் ஆயுசுக்கும் மூல நோய் கிட்ட நெருங்காது!

Photo of author

By Divya

மோரை இப்படி பயன்படுத்தினால் ஆயுசுக்கும் மூல நோய் கிட்ட நெருங்காது!

நாள்பட்ட மூல நோயை இயற்கை வைத்தியம் மூலம் குணமாக்க நினைப்பவர்களுக்கான பதிவு இது.

தேவையான பொருட்கள்:-

1)மோர்
2)மிளகு
3)கல் உப்பு
4)இஞ்சி

பைல்ஸ் புண், வலி குணமாக எளிய வீட்டு வைத்தியக் குறிப்பு பற்றி அறிந்து கொள்ளுங்கள். இதற்கு முதலில் ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கி உரலில் போட்டு இடித்துக் கொள்ளவும். அடுத்து அதில் 4 அல்லது 5 மிளகு போட்டு இடித்து எடுத்துக் கொள்ளவும்.

பிறகு ஒரு கிளாஸ் மோர் எடுத்து அதில் இடித்த இஞ்சி, மிளகு மற்றும் கல் உப்பு சேர்த்து கலந்து குடித்தால் மூல நோய் முழுமையாக குணமாகும்.

மற்றொரு தீர்வு:-

தேவையான பொருட்கள்:-

1)மாதுளம் பழத் தோல்
2)கற்கண்டு

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். பிறகு அதில் ஒரு துண்டு மாதுளம் பழத் தோல் சேர்த்து மிதமான தீயில் காய்ச்சவும். இதை ஒரு டம்ளருக்கு வடிகட்டி சிறிது கற்கண்டு சேர்த்து காய்ச்சி குடித்தால் மூல நோய் விரைவில் குணமாகும்.

தேவையான பொருட்கள்:-

1)முள்ளங்கி

செய்முறை:-

ஒரு முள்ளங்கியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்து ஜூஸ் செய்து கொள்ளவும்.

இதை ஒரு கிளாஸுக்கு வடிகட்டி குடித்து வந்தால் மூல நோய் புண்கள் ஆறும்.