எருக்க இலை + வசம்பை இப்படி பயன்படுத்தினால்.. காதில் சீழ் வழிவது உடனே நிற்கும்!!
நம் உடலில் செவித்திறன் கொண்ட உறுப்பான காதுகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது மிகவும் முக்கியம்.ஆனால் காதுகளில் அலர்ஜி,தொற்று பாதிப்புகள் ஏற்படுதல் போன்ற காரணங்களால் சீழ் வடிதல் ஏற்படுகிறது.
அதேபோல் காதுகளில் பட்ஸ் வைத்து குடைதல்,கோழி இறகை வைத்து குடைதல் போன்ற காரணங்களால் காதில் சீழ் உருவாகிறது.இந்த பாதிப்பை உங்களில் பலர் சந்தித்து வருவீர்கள்.
காதுகளில் சீழ் வடிந்தால் அலட்சியம் கொள்ளாமல் அதை உடனடியாக குணப்படுத்திக் கொள்ள வேண்டும்.
தேவையான பொருட்கள்:-
1)எருக்கன் இலை
2)பூண்டு பற்கள்
3)நல்லஎண்ணெய்
4)வசம்பு
5)பட்டை
6)பெருங்காயம்
செய்முறை:-
இரண்டு அல்லது மூன்று எருக்கன் இலையை உரலில் போட்டு இடித்து சாறு எடுத்துக் கொள்ளவும்.அதன் பின்னர் இரண்டு வெள்ளை பூண்டை தோல் நீக்கி வைத்துக் கொள்ளவும்.பிறகு சிறு துண்டு பட்டை,சிறு துண்டு வசம்பு மற்றும் தோல் நீக்கிய பூண்டை உரலில் போட்டு இடித்துக் கொள்ளவும்.
அதன் பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 100 மில்லி நல்லெண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.பின்னர் எருக்க இலை சாறு,அரைத்த விழுதை சேர்த்து மிதமான தீயில் காய்ச்சவும்.அதன் பின்னர் சிட்டிகை அளவு பெருங்காயத் தூள் சேர்க்கவும்.இந்த எண்ணெயை நன்கு ஆறவிட்டு வடிகட்டி காதுகளில் மூன்று துளிகள் விடவும்.இவ்வாறு தினமும் விட்டு வந்தால் காதுகளில் சீழ் வடிதல் பிரச்சனை சரியாகும்.
மற்றொரு தீர்வு:-
தேவையான பொருட்கள்:-
1)நாய்கடுகு
2)நல்லெண்ணெய்
செய்முறை:-
அடுப்பில் ஒரு வாணலி வைத்து 100 மில்லி நல்லெண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி நாய்கடுகு சேர்த்து நன்கு பொரிய விடவும்.பிறகு அடுப்பை அணைத்து எண்ணையை நன்கு ஆற விடவும்.
இந்த எண்ணெயில் 2 அல்லது 3 சொட்டுகளை காதில் விட்டால் சீழ் வடிதல்,காது வலி,காது வீக்கம் குணமாகும்.
தேவையான பொருட்கள்:-
1)தேங்காய் எண்ணெய்
2)இஞ்சி
3)பூண்டு
செய்முறை:-
அடுப்பில் ஒரு வாணலி வைத்து 50 மில்லி தேங்காய் ஊற்றி சூடாக்கவும்.பிறகு சிறு துண்டு இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.அதன் பிறகு இரண்டு பல் பூண்டை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.இவை இரண்டையும் சூடாகி கொண்டிருக்கும் எண்ணையில் போட்டு 2 நிமிடங்களுக்கு காய்ச்சி அடுப்பை அணைக்கவும்.இந்த எண்ணையை நன்கு ஆறவிட்டு சில சொட்டுகள் காதில் விட்டு வந்தால் காது வலி,சீழ் பிடித்தல் போன்ற பாதிப்புகள் குணமாகும்.