குளிக்கும் நீரில் இந்த ஒரு பொருளை சேர்த்தால்.. உடல் துர்நற்றம் கட்டுப்படும்!!

Photo of author

By Rupa

உடல் துர்நாற்ற பிரச்சனையை பலரும் சந்தித்து வருகினறனர்.உடலில் அதிகளவு வியர்வை வெளியேறுவதால் அக்குள்,அந்தரங்க பகுதியில் பாக்டீரியாக்கள் தேங்கி துர்நாற்றத்தை உண்டாக்குகிறது.இந்த வியர்வை நாற்றத்தை கட்டுப்படுத்த இயற்கை வீட்டு வைத்தியங்களை பின்பற்றவும்.

1)வேப்பிலை
2)மஞ்சள்
3)நொச்சி இலை

ஒரு கைப்பிடி வேப்பிலை மற்றும் 1/4 கைப்பிடி நொச்சி இலையை நீரில் அலசி சுத்தம் செய்யவும்.பிறகு இதை மிக்ஸி ஜாரில் போட்டு அரைக்கவும்.நன்கு பேஸ்ட் பதத்திற்கு அரைத்த பிறகு ஒரு கிண்ணத்திற்கு மாற்றிக் கொள்ளவும்.

பிறகு அதில் ஒரு தேக்கரண்டி கஸ்தூரி மஞ்சள் தூள் சேர்த்து கலக்கவும்.இதை உடல் முழுவதும் பூசி குளித்தால் உடல் துர்நாற்றம் ஏற்படாமல் இருக்கும்.

1)சந்தனப் பொடி
2)மஞ்சள் தூள்
3)கடலை மாவு
4)ரோஜா இதழ் பொடி

ஒரு கப் பன்னீர் ரோஜா இதழை காயவைத்து பொடி பண்ணிக் கொள்ளவும்.பிறகு ஒரு கிண்ணத்தில் 20 கிராம் கடலை மாவு,10 கிராம் ரோஜா இதழ் பொடி,20 கிராம் சத்தன கட்டை பொடி மற்றும் 10 கிராம் கஸ்தூரி மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்.

பிறகு அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி பேஸ்ட் பதத்திற்கு கலக்கி கொள்ளவும்.இந்த பேஸ்டை உடல் முழுவதும் பூசி குளிப்பதால் துர்நாற்றம் கட்டுப்படும்.

1)எலுமிச்சை சாறு
2)பேக்கிங் சோடா

குளிக்கும் நீரில் ஒரு எலுமிச்சம் பழத்தின் சாறு மற்றும் ஒரு தேக்கரண்டி பேக்கிங் சோடா சேர்த்து கலந்து விடவும்.இந்த நீரில் குளிப்பதால் உடலிலுள்ள அழுக்கு கிருமிகள் நீங்கி துர்நாற்றம் கட்டுப்படும்.

தினமும் இருவேளை குளிப்பதால் உடலிலுள்ள அழுக்கு கிருமிகள் நீங்கி துர்நாற்றம் ஏற்படுவது கட்டுப்படும்.வெந்நீரில் குளியல் போடுவதால் உடல் துர்நாற்றம் கட்டுப்படும்.அதிகளவு நீர் குடிப்பதால் உடலில் துர்நாற்றம் ஏற்படுவது கட்டுப்படும்.