புற்றுநோயை வராமல் தடுக்க வேண்டுமா? அப்போ பச்சை மிளகாயை சாப்பிடுங்க!!

0
90

புற்றுநோயை வராமல் தடுக்க வேண்டுமா? அப்போ பச்சை மிளகாயை சாப்பிடுங்க!!

 

நாம் உண்ணும் உணவில் இருக்கும் சத்துக்களை விட அதில் ஒதுக்கி வைக்கப்படும் பொருள்களில் அதிக அளவு நன்மைகள் இருக்கின்றன. எடுத்துக்காட்டாக நாம் உண்ணும் உணவில் கறிவேப்பிலை, பச்சை மிளகாய், குறுமிளகு போன்றவற்றை ஒதுக்கி வைப்போம். இதில் நிறைய சத்துக்கள் இருக்கின்றன. ஆனால் அதன் சத்துக்கள் மற்றும் நன்மைகள் தெரியாமல் அதை ஒதுக்கி வைத்து விடுகிறோம். அவ்வாறு ஒதுக்கி வைக்கப்படும் பொருள்களில் ஒன்றான பச்சை மிளகாயில் என்னென்ன நன்மைகள் இருக்கின்றது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

 

பொதுவாக மிளகாய் என்றாலே நம் நினைவிற்கு வருவது காரம் தான். பச்சை மிளகாய் என்றால் அதில் அதிக காரம் இருக்கிறது என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் காரம் நிறைந்த இந்த பச்சை மிளகாயில் நிறைய சத்துக்கள் உள்ளது என்பது நம்மில் எத்தனை பேருக்கும் தெரியும். இந்த பதிவில் பச்சை மிளகாயில் உள்ள நன்மைகள் என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

 

பச்சை மிளகாய் மூலம் கிடைக்கும் நன்மைகள்…

 

* உணவில் வீணாகும் பச்சை மிளகாயில் உடலுக்கு தேவையான விட்டமின் ஏ, தாமிரம், புரதம் போன்ற பல சத்துக்கள் உள்ளது.

 

* பச்சை மிளகாயில் உள்ள பீட்டா கரோட்டின் சத்து கண்களுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கின்றது. மேலும் கண்களின் பார்வையை அதிகரிக்கவும் உதவுகின்றது.

 

* பச்சை மிளகாய் நமக்கு புற்று நோய் ஏற்படும் அபாயத்தையும் குறைக்கின்றது.

 

* பச்சை மிளகாயில் உள்ள விட்டமின் ஈ சத்துக்கள் நம் சருமத்திற்கும் நன்மை கொடுக்கின்றது.

 

* சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு பச்சை மிளகாய் சிறந்த மருந்தாக இருக்கின்றது.

 

* பச்சை மிளகாய் நமக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொடுக்கின்றது.

 

* பச்சை மிளகாய் நமக்கு உணவை வேகமாக செரிமானம் செய்ய உதவுகின்றது.

 

* பச்சை மிளகாயில் கலோரிகள் இல்லை.

 

* பச்சை மிளகாயில் ஆன்டி-பாக்டீரியா சத்துக்கள் அதிகளவு உள்ளது.

 

* பச்சை மிளகாயில் இரும்புச் சத்துக்கள் அதிகளவு உள்ளது.

 

* பச்சை மிளகாயில் பொட்டாசியம், மக்னீசியம் போன்ற சத்துக்கள் அதிகம் இருப்பதால் இது இதய ஆரோக்கியத்திற்கும் சீரான இரத்த ஓட்டத்திற்கும் உதவுகின்றது.

 

* பச்சை மிளகாயில் சிலிகான் சத்துக்கள் இருப்பதால் இது தலை முடிக்கு சீரான இரத்த ஓட்டத்தை வழங்கி முடி உதிர்வதை தடுக்கின்றது.

 

* புகைப்பழக்கம் உள்ளவர்கள் உணவில் அதிக அளவு பச்சை மிளகாயை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவது தடுக்கப்படுகின்றது.

 

Previous articleபள்ளிகளுக்கு வெளியான அதிரடி உத்தரவு!! பள்ளிகல்வித்துறை அறிவிப்பு!!
Next articleவருமான வரி தாக்கல் செய்ய இறுதி நாள்!! இல்லையென்றால் அபராதம்!!