வருமான வரி தாக்கல் செய்ய இறுதி நாள்!! இல்லையென்றால் அபராதம்!!

0
28
Last day to file income tax!! Otherwise fine!!
Last day to file income tax!! Otherwise fine!!

வருமான வரி தாக்கல் செய்ய இறுதி நாள்!! இல்லையென்றால் அபராதம்!!

வருமான வரி தாக்கல் என்பது நாம் ஒரு ஆண்டு முழுவதும் எவ்வளவு வருமானம் ஈட்டுகிறோமோ அதை அரசிடம் ஒப்படைப்பது ஆகும். நம்முடைய சொத்து மதிப்பு முதற்கொண்டு அனைத்தையும் அரசிடம் ஒப்படைக்க வேண்டும்.

இவ்வாறு ஒவ்வொரு வருடமும் வருமான வரி தாக்கல் செய்ய அரசு ஒவ்வொரு தனி நபருக்கும் நான்கு மாதம் கால அவகாசம் கொடுக்கும். இதற்குள் தாக்கல் செய்யாவிட்டால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

எனவே, தற்போது வருமான வரி தாக்கல் செய்ய ஜூலை 31 வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தேதிக்குள் கொடுக்க தவறினால் அந்த நபர்களுக்கு 5000 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

மேலும், இந்த அபராதத்தை இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. அந்த வகையில், சிறிய அளவிலான வருமான வரி செலுத்தும் நபர்களுக்கு குறைந்த அளவு நிவாரணம் வழங்கப்பட உள்ளது.

அதாவது, ஒருவருடைய ஆண்டு வருமானம் ஐந்து லட்சத்திற்கு குறைவாக இருக்கும் பட்சத்தில் அவர் ஆயிரம் ரூபாய் மட்டுமே அபராதம் செலுத்தினால் போதுமானது.

அரசிடமிருந்து நோட்டீஸ் பெற்ற ஒரு நபர் அதன்பிறகும் வருமான வரியை தாக்கல் செய்யவில்லை என்றால், அவர்மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

மேலும், அவருக்கு மூன்று மாதம் முதல் இரண்டு ஆண்டுகளுக்கு சிறை தண்டனை வழங்குவதோடு மட்டுமல்லாமல், அபராதமும் விதிக்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

author avatar
CineDesk