திருச்சி ஐஐஎம்-மில் ரூ.70000 சம்பளத்தில் வேலை ரெடி!! கடைசி நாள் செப்டம்பர் 21!
திருச்சியில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தில் (IIM Trichy) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.இந்த பணிக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் நபர்கள் செப்டம்பர் 21க்குள் விண்ணப்பிக்கலாம்.
திருச்சியில் செயல்பட்டு வரும் இந்தியன் இன்ஸ்ட்டியூட் ஆப் மேனேஜ்மென்ட் (ஐஐஎம்) ஐடி சப்போர்ட் என்ஜினியர்,ஹிந்தி சூப்பர்வைசர்,லைப்ரேரி இன்பர்மேஷன் அசிஸ்டென்ட் உள்ளிட்ட பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த பணிகள் அனைத்தும் தற்காலிகமானது.பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் 2 ஆண்டுகள் வரை பணியமர்த்தப்படுவார்கள்.அதன் பின் அவர்களின் செயல்பாட்டை பொறுத்து பணி நீட்டிப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிறுவனம்: இந்திய மேலாண்மை நிறுவனம் திருச்சி (ஐ.ஐ.எம். திருச்சி), (Indian Institute of Management, Trichy)
1.ஐடி சப்போர்ட் என்ஜினியர்: இந்த பணிக்கு ஒரு காலியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் பிஇ,பிடெக் பிரிவில் இசிஇ,சிஎஸ்இ,ஐடி உள்ளிட்ட துறைகளில் ஏதேனும் ஒன்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.இல்லாவிட்டால் எம்எஸ்சி,பிஎஸ்சியில் கம்ப்யூட்டர் சயின்ஸ்,எம்சிஏ,பிசிஏ போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை படித்து முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயது 45க்குள் இருக்க வேண்டுமென்று சொல்லப்பட்டுள்ளது.
மாத ஊதியம்: ரூ.55000/- முதல் ரூ.70000/- வரை வழங்கப்படும்.
2.ஜூனியர் ப்ரோகிராமர்: இந்த பணிக்கு ஒரு காலியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் பிஇ,பிடெக் பிரிவில் ஐடி, சிஎஸ்இ,இசிஇ, எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட துறைகளில் ஏதேனும் ஒன்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இல்லாவிட்டால் எம்எஸ்சி,பிஎஸ்சியில் கம்ப்யூட்டர் சயின்ஸ்,ஐடி,பிசிஏ போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை படித்து முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயது 45க்குள் இருக்க வேண்டுமென்று சொல்லப்பட்டுள்ளது.
மாத ஊதியம்: ரூ.50000/- முதல் ரூ.65000/- வரை வழங்கப்படும்.
3.ஹிந்தி சூப்பர்வைசர்: இந்த பணிக்கு ஒரு காலியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் டிப்ளமோ,டிகிரி,மாஸ்டர் டிகிரியில் ஹிந்தி படிப்பை முடித்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.
வயது வரம்பு: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயது 40க்குள் இருக்க வேண்டுமென்று சொல்லப்பட்டுள்ளது.
மாத ஊதியம்: ரூ.30000/- முதல் ரூ.40000/- வரை வழங்கப்படும்.
4.லைப்ரேரி இன்பர்மேஷன் அசிஸ்டென்ட்: இந்த பணிக்கு மூன்று காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயது 35க்குள் இருக்க வேண்டுமென்று சொல்லப்பட்டுள்ளது.
மாத ஊதியம்: ரூ.30000 வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி
இப்பணிகளுக்கு தகுதி மற்றும் ஆர்வம் இருக்கும் நபர்கள் iimtrichy.ac.in இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும்.இந்த வாய்ப்பை தவறவிடாமல் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.
தேர்வு முறை: விண்ணப்பிக்கும் நபர்கள் எழுத்து தேர்வு,திறனறி தேர்வு மற்றும் நேர்காணல் முறையில் பணியமர்த்தப்பட உள்ளனர்.
கடைசி தேதி: 21-09-2023