வந்தாச்சு மத்திய அரசு வேலை.. மாதம் ரூ.95000 சம்பளம் பெற உடனே விண்ணப்பியுங்கள்!

0
39

வந்தாச்சு மத்திய அரசு வேலை.. மாதம் ரூ.95000 சம்பளம் பெற உடனே விண்ணப்பியுங்கள்!

மத்திய பொருளாதார விவகாரத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இந்திய பாதுகாப்பு அச்சகம் மற்றும் நாணயம் உற்பத்தி கழகம் (Security Printing and Minding Corporation of India) செயல்பட்டு வருகிறது.இந்தியாவின் கொல்கத்தா,மும்பை,ஹைதராபாத்,நொய்டா ஆகிய இடங்களில் இந்த இந்திய பாதுகாப்பு அச்சகம் மற்றும் நாணயம் உற்பத்தி கழகம் அமைந்துள்ளது.

தென்னிந்திய மாநிலமான தெலங்கானாவின் ஹைதராபாத்தில் இந்த கழகம் செயல்பட்டு வருகிறது.தற்பொழுது இந்த கழகத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிறுவனம்: இந்திய பாதுகாப்பு அச்சகம் மற்றும் நாணயம் உற்பத்தி கழகம்

காலிப்பணியிடங்கள்: 64

1.ஜூனியர் டெக்னீசியன்: இப்பணிக்கு 53 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ஐடிஐயில் எலக்ட்ரோ பிளேட்டர்,பவுண்டரிமேன்,புர்னாஸ் ஆபரேட்டர்,கெமிக்கல் பிளான்ட் ஆபரேட்டர்,லேப் அசிஸ்டென்ட் (கெமிக்கல் பிளான்ட்),கோல்ட்ஸ்மித்,ஜூவெல் ஸ்மித், மில்ரைட் மெயின்டெனன்ஸ் மெக்கானிக்கல்,எலக்ட்ரிசியன்,வெல்டர்,எலக்ட்ரானிக்ஸ்,இன்ஸ்ட்ருமென்டேசன், எலக்ட்ராகனிக்ஸ் மெக்கானிக்,இன்ஸ்ட்ருமென்டேசன் மெக்கானிக் உள்ளிட்ட பிரிவுகளில் படித்து முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயது 18 முதல் 25க்குள் இருக்க வேண்டும்.

மாத ஊதியம்: ரூ.18,780/- முதல் ரூ.67,390/- வரை வழங்கப்படும்.

2.சூப்பர்வைசர்: இப்பணிக்கு 7 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் மாஸ்டர் டிகிரியில் அல்லது ஆங்கிலம் முடித்திருக்க வேண்டும்.டிப்ளமோ என்றால் எலக்ட்ரானிக்ஸ்/எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேசன்,எலக்ட்ரானிக்ஸ் அன்ட் டெலிகம்யூனிகேசன்,பிஇ,பிடெக்,பிஎஸ்சி என்றால் மெட்டாலூர்சிகல் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயது 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.

மாத ஊதியம்: ரூ.27,600/- முதல் ரூ.95,910/- வரை வழங்கப்படும்.

3.லேபாரட்டரி அசிஸ்டென்ட் குரூப் II: இப்பணிக்கு 2 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பிஎஸ்சி பிரிவில் கெமிஸ்ட்ரி படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டும்.

வயது வரம்பு: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயது 18 முதல் 28க்குள் இருக்க வேண்டும்.

மாத ஊதியம்: ரூ.21,540/- முதல் ரூ.77,160/- வரை வழங்கப்படும்.

4.எங்க்ராவர் (மெட்டல் வொர்க்ஸ்): இப்பணிக்கு ஒரு காலியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர் இளங்கலை பிரிவில் பைன் ஆர்ட்ஸ் (மெட்டரல் வொர்க்ஸ்) டிகிரி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயது 18 முதல் 28க்குள் இருக்க வேண்டும்.

மாத ஊதியம்: ரூ.23,910/- முதல் ரூ.85,570/- வரை வழங்கப்படும்.

5.செக்ரட்டரியல் அசிஸ்டென்ட்: இப்பணிக்கு ஒரு காலியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி: ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயது 18 முதல் 28க்குள் இருக்க வேண்டும்.

மாத ஊதியம்: ரூ.23,910/- முதல் ரூ.85,570/- வரை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறை

இப்பணிகளுக்கு தகுதி மற்றும் ஆர்வம் இருக்கும் நபர்கள் igmhyderabad.spmcil.com என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

கடைசி தேதி: இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி அக்டோபர் 1 ஆகும்.

விண்ணப்ப கட்டணம்: இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் பொது பிரிவினருக்கு ரூ.650 என்று விண்ணப்ப கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.அதேபோல் எஸ்சி,எஸ்டி,பிடபிள்யூடி,முன்னாள் படை வீரர்களுக்கு ரூ.300 என்று விண்ணப்ப கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தேர்வு முறை: ஆன்லைன் எழுத்து தேர்வு மற்றும் நேர்க்காணல் முறையில் தகுதியானவர்கள் இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.