மாநிலங்களவை உறுப்பினர் பதவியை இளையராஜா ஏற்பது எப்போது?  வெளியான தகவல்!

0
138

மாநிலங்களவை உறுப்பினர் பதவியை இளையராஜா ஏற்பது எப்போது?  வெளியான தகவல்!

இன்று இளையராஜா தன்னுடைய எம்.பி. பதவியை நாடாளுமன்றத்தில் ஏற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதியால் நேரடியாக நியமிக்கப்படும் ராஜ்யசபா எம்.பி. பதவியில் தமிழ் சினிமாவின் பெருமைமிகு அடையாளங்களில் ஒருவரான இளையராஜா நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. கலை, விளையாட்டு போன்ற துறைகளில் சாதித்தவர்களுக்கு ஜனாதிபதி நியமனத்தில் முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு இதுபோல ராஜ்யசபா பதவி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இது சம்மந்தமாக பாராட்டுகளுக்கு நிகராக சர்ச்சைகளும் உருவாகி விவாதிக்கப்பட்டன.

இந்தியாவில் பல மொழி சினிமாக்களில் 1000க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்தவர் இளையராஜா. அளப்பரிய சாதனைகளைப் படைத்துள்ள அவர் தனது 80 ஆவது வயதில் தற்போதும் பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். தற்போது அவர் வெளிநாட்டில் கச்சேரி செய்ய சென்றுள்ளார்.

ஆனால் பதவி அறிவிக்கப்பட்ட போது அவர் அமெரிக்காவில் இசை நிகழ்ச்சியில் இருந்ததால் அவரால் பதவி ஏற்க முடியவில்லை. இந்நிலையில் இன்று அவர் பாராளுமன்றத்தில் பதவி ஏற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. மேலும் இன்றுதான் புதிய ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்களும் பதவி ஏற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleஅக்ஸர் படேல் கடைசி நேர அதிரடி…. பரபரப்பான போட்டியில் இந்தியா திரில் வெற்றி!
Next article“ஹர்திக் பாண்ட்யா விரைவில் ஓய்வா?…” முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பரபரப்பு கருத்து