மஞ்சும்மல் பாய்ஸ் படத்திற்கு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா..!! இதோ ஆரம்பிச்சிட்டாரு..!!

0
151
ilayaraja issue in tamil

Ilayaraja Issue in Tamil: தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக இருந்து வருபவர் தான் இசைஞானி இளையராஜா. இவரின் இசையில் உருவான பாடல்கள் என்றால் இன்றையக் காலத்து இளைஞர்கள் கூட தங்களையும் மறந்து ரசிப்பார்கள். இவரின் இசையில் உருவான பாடல்கள் அனைத்தும் தற்போது வரை தனி இடத்தை பிடித்துள்ளது என்று தான் கூற வேண்டும்.

அந்த வகையில் கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறி இருப்பவர் தான் இசைஞானி இளையராஜா. கவிஞர் வைரமுத்து அவர்கள் ஒரு நிகழ்ச்சியில் மொழி பெரியதா? பாடல் பெரியதா? என்ற தலைப்பை ஆரம்பிக்க, அது சமூக வலைத்தளங்களில் பேசு பொருளானது. வைரமுத்து இளையராஜாவை தான் குறிப்பிடுகிறார் என்று பல தரப்பினரும் கருத்து தெரிவித்து வந்த நிலையில் இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன் அவருக்கு பதில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

அதில் தங்களால் உயர்ந்தவர் இப்பொழுது எங்களை அவமதித்து பேசுகிறார் என்று கங்கை அமரன் வீடியோ ஒன்றை வெளியிட்டார். இது சினிமா துறையில் அதிர்ச்சி ஏற்படுத்துவதாக இருந்தது. இந்நிலையில் வைரமுத்துவின் சில பதிவுகள், இளையராஜா பதவு என்று மாறி, மாறி பதிவிட சமீப நாட்களாக இவர்களின் பிரச்சனை ஓயாத நிலையில் இருந்து கொண்டிருந்தது.

இந்நிலையில் இளையராஜா நீதிமன்றத்தில் என்னுடைய பாடல்களை, என்னுடைய அனுமதி வாங்காமல் பலரும் பயன்படுத்தி வருவதாக வழக்கு தொடுத்தார். நீதிபதி ஒரு பாடலுக்கு பாடல் ஆசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் என கேள்வி எழுப்பியிருந்தார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள நிலையில் இளையராஜா கூலி படத்தில் தன்னுடைய இசையை என்னுடைய அனுமதி வாங்காமல் பயன்படுத்தியதற்காக கூலி படத்திற்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.

மீண்டும் தற்போது இளையராஜா மலையாளத்தில் இந்த ஆண்டு 2024 பிப்ரவரி 22 வெளியான மஞ்சும்மல் பாய்ஸ் (Manjummel Boys) திரைப்பட தயாரிப்பு நிறுவனத்திற்கு நாேட்டீஸ் அனுப்பி உள்ளார். அதில் இளையராஜாவின் வழக்கறிஞர் சார்பில் அனுமதி வாங்கி பாடலை படத்தில் பயன்படுத்த வேண்டும் இல்லை படத்தில் இருந்து பாடலை உடனடியாக நீக்க வேண்டும், பாடலை உரிய அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதற்காக உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், இல்லையென்றால் உரிமையியல் மற்றும் குற்றவியல் நடவடிக்கை மேற்க்கொள்ளப்படும் எனவும் தெரிவித்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

மேலும் படிக்க: இளையராஜா-வைரமுத்து பிரிவுக்கு காரணம் தான் என்ன?