மாரி செல்வராஜ் ஒரு சைக்கோ! பொதுவெளியில் போட்டுடைத்த உதயநிதி..!!

0
160
He deliberately left us in the campaign.
He deliberately left us in the campaign.

Udhayanidhi Stalin: கடந்த 2023 ஆம் ஆண்டு நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி அடைந்த படம் தான் மாமன்னன். இந்த படத்தை இயக்குநர் மாரி செல்வராஜ் (director Mari Selvaraj) இயக்கிருந்தார். இந்த படத்தில் நடிகர் வடிவேலு, மலையாள நடிகர் பகத் பாசில் (Fahadh Faasil), நடிகையாக கீர்த்தி சுரேஷ்(Keerthy Suresh) ஆகியோர் நடித்திருந்தார்கள். மேலும் இந்த படத்தில் பல நடிகர்கள் நடித்திருந்த நிலையில் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவற்பை பெற்றது.

தற்போது தமிழக விளையாட்டுத்துறை அமைச்சராக இருக்கும் உதயநிதி இந்த படத்தின் நடிகராக நடித்திருந்தார். அரசியல் படமாக எடுக்கப்பட்ட இந்த படம் வெளியாகிய போது, ஒரு சிலர் இந்த படம் உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட படம் என்று கூறினார்கள். அதனால் இந்த படம் அப்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக இருந்தது. மேலும் இந்த படத்தில் நடித்த பகத் பாசில் நடிப்பு அனைவரையும் ஈர்த்தது.

நடிகர் பகத் பாசில் இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவரின் நடிப்பு இந்த படத்திற்கு கூடுதல் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது என்று தான் கூறவேண்டும். இந்த படம் வெளியான சமயம் தமிழ் ரசிகர்கள் ரத்தினவேல் கவுண்டர் கதாப்பாத்திரத்தில் நடித்த இவரை கொண்டாடினார்கள். அதேபோன்று நீண்ட இடைவேளைக்கு பிறகு நகைச்சுவை கதாபாத்திரத்தில் இதுவரை பார்த்த வடிவேலுவை, சீரியஸ்யான கதாபாத்திரத்தில் பார்த்தது அனைவரும் ரசிக்கும்படியாக இருந்தது.

இந்நிலையில் தான் நடிகர் உதயநிதி மற்றும் இயக்குநர் மாரி செல்வராஜ் பங்கேற்ற ஒரு பேட்டியில் உதயநிதி இயக்குநர் மாரி செல்வராஜை சைக்கோ என்று கூறினார். மாமன்னன் படப்பிடிப்பின் போது ஒரு சண்டைக்காட்சி படமாகப்பட்டு கொண்டிருந்தது. அதில் நானும், பகத் பாசில் நடித்துக்கொண்டிருந்தோம். அந்த காட்சி படமாக்க 3 நாட்கள் தான் கொடுக்கப்பட்டது. காரணம் இந்த இடத்திற்கான கால அவகாசம் 3 நாட்கள் தான் கொடுத்தார்கள்.

அதற்கு அடுத்த நாள் இடத்தை காலி செய்ய வேண்டும். நானும், பகத் பாசில் நடித்த காட்சி நடித்து முடித்த பிறகு மாரி செல்வராஜ் விருப்பமே இல்லாமல் கட் செய்து ஓகே சொல்லிவிட்டார். பிறகு பகத் பாசில்  வந்து மானிட்டரை பார்த்தார். அப்போது பகத் பாசில் இந்த காட்சி சரி இல்லை மாரி, நாளை நாம் ஷூட் செய்துக்கொள்ளலாம் என கூறினார். அதற்கு நான் அந்த ஆளே ஒரு சைக்கோ.. அவனே ஓகே சொல்லிவிட்டான் பகத் பாசில் இப்படி கூறுகிறாரே என்று நினைத்ததாக இயக்குநர் மாரி செல்வராஜ் முன் நடிகர் உதயநிதி கூறியுள்ளார்.

மேலும் படிக்க: எனக்கு திருமணம் ஆகாமல் இருப்பதற்கு இவர்கள் தான் காரணம்..!! vj பார்வதி வேதனை..!!