சென்னை ஐஐடியில் இசைஞானி இளையராஜா நெகிழ்ச்சி..!!

0
187
Ilayaraja iit madras

Ilayaraja iit madras: இந்திய இசை கலாச்சாரத்தை பாதுகாக்கும் ஸ்பிக் மேகே அமைப்பின் ஒன்பதாவது சர்வதேச இசை மற்றும் கலாச்சார மாநாடு சென்னை ஐஐடியில் கோலாகலமாக நேற்று நடைபெற்றது. இதில் இசைஞானி இளையராஜா மற்றும் திரிபுரா ஆளுநர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றார்கள்.

முன்னதாக சென்னை ஐஐடியில் மேஸ்ட்ரோ இளையராஜா இசை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் அமைப்பதற்கான ஒப்பந்தம் இளையராஜா இசை நிறுவனத்துடன் போடப்பட்டது. அதன்படி நேற்றைய தினம் இளையராஜா நிகழ்ச்சியில் பங்கேற்று அடிக்கல் நாட்டி நிகழ்ச்சியில் பேசினார்.

அதன்படி இளையராஜா பேசும்பொழுது நான் கிராமத்தில் இருந்து இசை கற்க வெறும் 400 ரூபாயுடன் சென்னை வந்தேன். அப்பொழுது நான் முழுமையாக இசையை கற்கவில்லை. கல்வியாக இருந்தாலும், மற்ற வேலையாக இருந்தாலும் சரி ஒரு தாகம் வேண்டும். இலட்சியத்துடனும், முயற்சியுடனும் செய்தால் எந்த துறையாக இருந்தாலும் நாம் சாதிக்கலாம் என்று கூறினார்.

மேலும் சிலர் கூறுகிறார்கள் நான் ஏதோ சாதனை செய்து விட்டேன் என்று, எனக்கு ஒன்றும் அப்படி தெரியவில்லை. நான் கிராமத்தில் இருந்து இசையை பற்றி எதுவுமே தெரியாமல் எப்படி வந்தேனோ அது போல தான் தற்போது வரை நான் உணர்கிறேன். எனது மூச்சி இசை தான். இசை என்னிடம் இயல்பாகவே இருக்கிறது.

இந்த சென்னை ஐஐடி மற்றும் இளையராஜா இசை ஆராய்ச்சி பயிற்சியின் மூலம் 200 இளையராஜா உருவாக வேண்டும் என்பது தான் எனது ஆசை. இவ்வாறாக நேற்று நடைபெற்ற சென்னை ஐஐடி நிகழ்ச்சியில் பேசினார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் பல்வேறு மாநிலங்களில் இருந்து 1500 க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி மாணவர்கள், இசைக்கலைஞர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சி ஒரு வாரம் தொடர்ந்து நடைபெற உள்ளது. அதன்படி இந்நிகழ்ச்சி வரும் 26 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

மேலும் படிக்க: இளையராஜா-வைரமுத்து பிரிவுக்கு காரணம் தான் என்ன?