அண்ணியுடன் அடிக்கடி ஆட்டம்போட்ட கணவன்! படுக்கையை தடுக்க நினைத்த மனைவிக்கு நேர்ந்த கதி?

0
211

அண்ணியுடன் அடிக்கடி ஆட்டம்போட்ட கணவன்! படுக்கையை தடுக்க நினைத்த மனைவிக்கு நேர்ந்த கதி?

வெளிநாட்டில் இருந்து வந்து அண்ணியுடன் நெருக்கமாக இருந்த கணவரை தட்டக்கேட்ட மனைவியை கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் ஊரைச் சேர்ந்தவர் முனீஸ்வரன். இவருக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு தனலட்சுமி என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த முனீஸ்வரன் சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 18 ஆம் தேதி தனது மனைவி தனலட்சுமியிடம் வேலையின் காரணமாக நகைகளை தன்னிடம் தருமாறு கேட்டுள்ளார். இதற்கு அவரது மனைவி மறுப்பு தெரிவித்த நிலையில், இருவருக்கும் தகராறு ஏற்பட்டு கோபத்தில் மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தாமாகவே காவல் நிலையத்தில் சரண்டர் ஆகியுள்ளார்.

இச்சம்பவம் குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பல திடுக்கிடும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. வெளிநாட்டில் வேலை செய்து வந்த முனீஸ்வரன் சம்பள பணத்தை அண்ணியிடம் கொடுத்து வந்துள்ளார். இதனால் அவருக்கும் அவரது அண்ணிக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் தனலட்சுமி வறுமையில் இருந்தார் என்றும் கூறப்படுகிறது.

குடும்ப வறுமையை போக்க மகளிர் சுயுஉதவி குழுவின் மூலம் உதவியை பெற்று தென்னை கீற்றுகளை பின்னி அதன் மூலம் வந்த வருமானத்தின் மூலம் குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். இதனையடுத்து வெளிநாட்டில் இருந்து வந்த முனீஸ்வரன் மனைவியை கவனிக்காமல் அண்ணியுடன் அதிகமான நெருக்கத்தை காட்டியதாகவும், இதன்மூலம் குடும்பத்தில் பிரச்சினைகள் வந்ததாகவும் சொல்லப்படுகிறது.

கள்ளத்தொடர்புக்கு மனைவி இடையூறாக இருந்த காரணத்தால் நகை கேட்பது போல் சண்டைபோட்டு மனைவியை கொன்றது கடைசியில் தெரியவந்தது. தவறான உறவிற்கு தடையாக இருந்த மனைவியை கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleகொரோனா வைரஸ் பரவல் குறித்து ரஜினி வெளியிட்ட வீடியோ அதிரடியாக நீக்கி நடவடிக்கை : கொந்தளிப்பில் ரசிகர்கள்!
Next articleவீடில்லாமல் சாலை ஓரங்களில் தங்கியிருந்த மக்களை ஊரடங்கு சமயத்தில் பாதுகாக்க புதிய முயற்சி : அசத்தும் தமிழக அரசு!