இளம்பெண்ணை அடைய ஈபி ஆபிசர் செய்த காரியம்! கணவன் கொடுத்த ஷாக் ட்ரீட்மெட்! அதிர்ந்து போன காவல்துறை..!!

0
157

இளம்பெண்ணை அடைய ஈபி ஆபிசர் செய்த காரியம்! கணவன் கொடுத்த ஷாக் ட்ரீட்மெட்! அதிர்ந்து போன காவல்துறை..!!

கள்ளக்காதலுக்காக மின்சார ஊழியர் செய்த தவறான செயலால் இளம்பெண்ணின் கணவரிடம் அடி வாங்கிய சம்பவம் சேலத்தில் அரங்கேறியுள்ளது.

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகேயுள்ள நேரு நகரைச் சேர்ந்த பழனிசாமி என்பவர் மின்சார ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். கொரோனா பாதிப்பு காரணமாக தமிழகத்தில் அத்தியாவசிய பணிகளுக்கு விடுமுறை கிடையாது என்பதால் வழக்கம்போல மின்சார பணிக்கு சென்று வந்த பழனிசாமி, செவ்வாய் கிழமை அன்று ஊரடங்கு பாதுகாப்பில் இருந்த போலீசார் தன்னை தாக்கிவிட்டதாக அவரது சக பணியாளர்களிடம் கூறினார்.

இதுகுறித்து சக மின்சார ஊழியர்கள் கேட்டபோது; சதுரங்கவாடி இந்தியன் வங்கி அருகே பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தனது வாகனத்தை நிறுத்தி விசாரித்ததாகவும், மின்சார ஊழியர் என்று கூறிய பின்னரும் அதை நம்பாமல் தன்னை சராமாரியாக தாக்கினர் என்றும், மேலும் தனது அடையாள அட்டையை காட்டுவதற்குள் கடுமையாக தக்கியதாக தனது முதுகையும் பழனிசாமி சக பணியாளர்களிடம் காண்பித்துள்ளார்.

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த மின்சார ஊழியர்கள் பழனிசாமிக்கு நடந்த கொடுமை குறித்து சங்கத்தின் மூலம் மின்வாரிய தலைவருக்கு புகார் அனுப்பி உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்தனர். மேலும் இது சம்பந்தமாக சமூக வலைதளங்களிலும் அவர்கள் கண்டனத்தை பதிவு செய்ததோடு ஒரு கட்டத்தில் போலீசாரை கண்டித்து போராட்டம் வரை சென்றது. இதனையடுத்து இச்சம்பவம் தொடர்பான புகார் காவல்நிலையம் சென்றது. இதனைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த துணை கண்காணிப்பாளர் செளந்தரராஜன் இதுகுறித்து விசாரணை நடத்த கூறினார்.

அத்தியாவசிய பணியில் இருக்கும் ஊழியரை யார் அடித்தது என்ற கேள்விக்கு, நாங்கள் யாரையும் தாக்கவில்லை என்று ஊர்க்காவல் பணியில் இருந்த போலீசார் பதில் கூறினர். இதனையடுத்து சிசிடிவியில் இச்சம்பவம் தொடர்பாக தேடியபோது மின்சார ஊழியர் பழனிச்சாமி போலீசார் இருந்த வழியில் வரவே இல்லை என்பது உறுதியானது. இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்தியபோது அதிர்ச்சியான தகவல் வெளியானது.

மின்வாரியத்தில் பயிற்சிக்கு பழக வந்த 22 வயதான இளம்பெண்ணிடம் தவறான தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள அவருக்கு நிரந்தர வேலை வாங்கி தருவதாக ஜாலியாகவும், தந்திரமாகவும் பேசி மயக்கி கள்ளக்காதலை வளர்த்து இருவரும் பழகி வந்துள்ளனர். இந்த சம்பவத்தை அறிந்த இளம்பெண்ணின் கணவர் தனது மனைவியை கண்டித்துள்ளார். இதனால் பழனிசாமியுடன் பழகுவதை இளம்பெண் தவிர்த்துள்ளார். ஆனாலும் பழனிசாமி தனது ஆசையை அடக்கமுடியாமல் அந்த பெண்ணுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த சிக்கலுக்கு முற்றுப்புள்ளி வைக்க மனைவி மூலம் பழனிச்சாமியை வீட்டிற்கு வரவழைக்கு கணவன் திட்டமிட்டார். கணவர் சொன்னபடியே பழனிசாமியை அவரது வீட்டிற்கு இளம்பெண் அழைத்துள்ளார்.

செவ்வாய் கிழமையன்று வேலை முடிந்து தனது வீட்டுக்கு செல்லாமல், ஆசையுடன் இளம்பெண்ணின் வீட்டிற்கு பழனிசாமி சென்றுள்ளார். வீட்டிற்கு உள்ளே நுழைந்ததும் இளம்பெண் உடனடியாக கதவை சாத்திய பிறகு கனவோடு சென்ற பழனிசாமிக்கு இளம்பெண்ணின் கணவர் மூலம் தர்ம அடியும் கும்மாங்குத்தும் விழுந்தது. இதனையடுத்து தான் அடிவாங்கியது மனைவிக்கு தெரிந்தால் பிரச்சினையாகும் என்பதால் போலீஸ் மீது தவறான குற்றச்சாட்டை கூறி தப்பிக்க முயற்சி செய்தது விசாரணையில் தெரியவந்தது.

இதைக் கேட்டதும் மின்சார ஊழியர்களும், போலீசாரும் அதிர்ச்சி அடைந்தனர். இதன் பின்னர் பழனிசாமி சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார். சக ஊழியர்களும் காவல்துறையினரிடம் வருத்தம் தெரிவித்து சென்றனர். கள்ளக்காதலுக்காக காவல்துறை மீது பொய் குற்றச்சாட்டு கூறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleஇந்தியாவில் 2144 பேருக்கு கொரோனா தொற்று : மாநில அளவில் பதர வைக்கும் எண்ணிக்கை!
Next articleஏப்ரல் 5 ஆம் தேதி மின் விளக்குகளை அணையுங்கள்! மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்!