செல்போனில் அடிக்கடி சிரித்து பேசிய மனைவி! ஆத்திரத்தில் ஆயுளை முடித்த கணவன்! திருவள்ளூரில் நடந்த திகில் சம்பவம்

Photo of author

By Jayachandiran

செல்போனில் அடிக்கடி சிரித்து பேசிய மனைவி! ஆத்திரத்தில் ஆயுளை முடித்த கணவன்! திருவள்ளூரில் நடந்த திகில் சம்பவம்

வீட்டில் இருந்தபோது செல்போனில் சிரித்து பேசிய மனைவியை சந்தேகத்தின் பேரில் கொலை செய்த சம்பவம் திருவள்ளூரில் நடந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ஜிஆர் கண்டிகை கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவர், கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவருக்கு புஷ்பா என்கிற மனைவியும், இரண்டு மகள்கள், ஒரு மகனும் உள்ளனர். மகள் இருவருக்கும் திருமணமாகி அவரவர் கணவன் வீட்டில் உள்ளனர். மகன் பிளஸ் 2 படித்து வருகிறார்.

சில மாதங்களாக புஷ்பா செல்போனில் யாருடனோ அடிக்கடி சிரித்து பேசி வந்துள்ளார் இதனைப்பார்த்த ரமேஷ் யாருடன் பேசுகிறாய் என்று கூறி அடிக்கடி தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் புஷ்பா வேறொருவருடன் தனிமையில் உல்லாசமாக இருந்ததாக ரமேஷுக்கு தெரியவந்தது.

இந்நிலையில் இவர்களது மகன் நேற்று முன்தினம் உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்ட நிலையில், அன்று இரவு ரமேஷ் தனது மனைவி புஷ்பாவுடன் வாய்த் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனைவி மீது ஆத்திரத்தில் இருந்த ரமேஷ் நேற்று அதிகாலை மூன்று மணியளவில் எழுந்து, அயராது தூக்கத்தில் இருந்த மனைவி புஷ்பாவின் கழுத்தில் கத்தியால் கொடூரமாக குத்தியுள்ளார். இதனால் வலிதாங்க முடியாத புஷ்பா கத்தியதில் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்தனர்.

ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த புஷ்பாவை பார்த்தி அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலை அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்த உடலை கைப்பற்றி பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதன் பின்னர் கொலையாளி ரமேஷை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.