ஊரடங்கு உத்தரவால் கள்ளக்காதலி வீட்டில் தங்கிய டாக்சி டிரைவர்! இடையூறாக இருந்த மகனை கொன்ற அதிர்ச்சி சம்பவம்!

0
166

ஊரடங்கு உத்தரவால் கள்ளக்காதலி வீட்டில் தங்கிய டாக்சி டிரைவர்! இடையூறாக இருந்த மகனை கொன்ற அதிர்ச்சி சம்பவம்!

கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த 6 வயது மகனை பெற்ற தாயே அடித்துக் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் கோவையில் அரங்கேறியுள்ளது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியைச் சேர்ந்த அருண் என்பவரும் திவ்யா என்ற மனைவியும் 6 வயதில் அபிஷேக் என்ற மகனும் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். அருண் வாகன ஓட்டுனராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து கோவையில் உள்ள கோவில்மேட்டில் தனது 2 குழந்தைகளுடன் வாடகை வீட்டில் வசிந்து வந்துள்ளார்.

கணவனை பிரிந்து வாழ்ந்து வந்த திவ்யா அப்பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தபோது கால்டாக்சி ஓட்டுனர் ராஜதுரை என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறி இருவரும் உல்லாசம் அனுபவித்துள்ளனர். திவ்யாவின் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்ற ராஜதுரை ஊரடங்கு உத்தரவு காரணத்தால் கள்ளக்காதலியின் வீட்டிலேயே தங்கியுள்ளார்.
இதையடுத்து இருவரின் சல்லாபத்திற்கு சிறுவன் அபிஷேக் தடையாக இருந்துள்ளான். இதனால் திவ்யா மற்றும் அவரது கள்ளக்காதலன் ராஜதுரை இருவரும் இணைந்து சிறுவனை தாக்கியுள்ளனர். காயமடைந்த சிறுவனுக்கு மருந்துகளையும் வீட்டிற்கே வாங்கி வந்து கொடுத்தும் சரியாகவில்லை. சிறுவனின் உடல்நிலை மிகவும் மோசமானதால் ஆம்புலன்ஸை அழைத்தனர்.

சிறுவனின் உடலை சோதித்து பார்த்தபோது உடல் முழுக்க காயம் இருப்பது தெரிந்தது. மேலும் சிறுவன் உயிரிழந்துவிட்டதாகவும் கூறினர். பின்னர் இத்தகவல் காவல்துறைக்கு செல்லவே, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். தன்னுடைய மகன் மாடியில் இருந்து தவறி விழுந்ததால் காயம் ஏற்பட்டு உயிரிழந்ததாக திவ்யா நாடகமாடினார். சிறுவன் உடலில் இருந்த காயங்கள் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. கடைசியாக நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில் திவ்யா மற்றும் அவரது கள்ளக்காதலன் ராஜதுரை இருவரும் சிறுவனை அடித்துக் கொன்ற உண்மையை ஒப்புக் கொண்டனர். இதனையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். பெற்றதாயே மகனை கொன்ற கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleஉலகப்புகழ்பெற்ற டாம் அண்ட் ஜெர்ரி இயக்குனர் மரணம்! ஆஸ்கர் நாயகனுக்கு பலர் இரங்கல்!
Next articleகொரோனா நிவாரண பொருட்களை நிபந்தனையுடன் வழங்க வேண்டும்! -சென்னை மாநகராட்சி அறிவிப்பு