கடனுக்கு கணவன்.. வட்டிக்கு மனைவி.! கவுன்சிலரின் அடிக்கடி சந்திப்பால் ஆயுளை முடித்துக் கொண்ட அதிர்ச்சி சம்பவம்!

Photo of author

By Jayachandiran

கடனுக்கு கணவன்.. வட்டிக்கு மனைவி.! கவுன்சிலரின் அடிக்கடி சந்திப்பால் ஆயுளை முடித்துக் கொண்ட அதிர்ச்சி சம்பவம்!

அவசரத்திற்காக கடன்வாங்கி கட்டமுடியாமல் கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருவள்ளூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் எண்ணூரைச் சேர்ந்த சரத்குமார் என்பவர், 8 வருடங்களுக்கு முன்பு மஞ்சுளா என்ற பெண்மணியை காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். குடும்ப வருமானத்திற்காக அருகில் இருந்து இறைச்சி கடை ஒன்றில் சரத்குமார் வேலை பார்த்து வந்துள்ளார். வறுமை சூழலின் காரணமாக அப்பகுதி கவுன்சிலர் பாபு என்பவரிடம் கந்துவட்டிக்கு சரத்குமார் கடன் வாங்கியுள்ளார். கடனை வசூலிக்க சரத்குமாரின் வீட்டிற்கு கந்துவட்டி பாபு அடிக்கடி சென்று வந்துள்ளார்.

இதனால் சரத்குமார் மனைவி மஞ்சுளாவிற்கும் கந்துவட்டி பாபுவிற்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இவர்களின் தொடர்பு குறித்து பாபுவின் மனைவி கிரிஜா சரத்குமாரிடம் தெரிவித்துள்ளார். உன் மனைவியும் எனது கணவரும் காதலிக்கிறார்கள் என்றும், விரைவில் இருவரும் திருமணம் செய்ய இருப்பதாகவும் கிரிஜா தெரிவித்தார். இதைக்கேட்டதும் சரத்குமார் அதிர்ச்சியடைந்தார். இதன் பின்னர் மனைவியிடம் சரத்குமார் கேள்வி கேட்டு கண்டித்துள்ளார். இதையடுத்து மஞ்சுளா தனது குழந்தைகளுடன் அம்மா வீட்டிற்கு சென்றுவிட்டார்.

மனைவியின் செயலால் மன உளைச்சலில் இருந்த சரத்குமார் வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தனது தற்கொலைக்கு முன்பு வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது;

என் பெயர் சரத்குமார், நான் இறைச்சி கடை ஒன்றில் வேலை செய்து வருகிறேன். குடும்ப கஷ்டத்திற்காக கந்துவட்டி பாபுவிடம் கடன் வாங்கினேன். மற்றவருக்கு கடன் கொடுக்கும் முன்பு அவர்களின் மனைவியின் போன் நம்பர் வாங்குவதை பாபு வாடிக்கையாக வைத்துள்ளார்.

மேலும் தன்னை மாமா என்றுதான் அழைக்க வேண்டும் என்று பாபு சொல்லியிருப்பதாகவும் வீடியோவில் சரத்குமார் கூறிள்ளார். இதனால் என் பேச்சை மீறி பாபுவை மாமா என்று அழைத்தும் அடிக்கடி வீட்டில் சந்தித்து என் குடும்பத்தையே நாசம் செய்துவிட்டான் என்று சரத்குமார் தனது வாக்குமூலத்தை வீடியோவில் பேசியுள்ளார்.

இச்சம்பவம் குறித்து வெளியான வீடியோ தகவல்கள் உண்மையா என்றும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கந்துவட்டியால் கணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.