மருத்துவ துறையில் காலி பணியிடங்கள் நிரப்ப உடனடி நடவடிக்கை! தமிழக அரசு எடுக்க போகும்  முடிவு என்ன?

மருத்துவ துறையில் காலி பணியிடங்கள் நிரப்ப உடனடி நடவடிக்கை! தமிழக அரசு எடுக்க போகும்  முடிவு என்ன?

தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல் அரசு துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்பட்டு வருகின்றது.அந்த வகையில் அண்மையில் டிஎன்பிஎஸ்சி என போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றது.அதன் பிறகு மருத்துவம்,காவல்துறை,கல்வித்துறை உள்ளிட்ட பிற துறைகளிலும் உள்ள காலி பணியிடங்கள் படிப்படியாக நிரப்பப்பட்டு வருகின்றது.அதன் அடிப்படையில் மருத்துவத்துறையில் இயக்குனர் காலி பணியிடங்களும் நிரப்பப்படாமல் உள்ளது.

தற்போது காலியாக உள்ள நான்கு மருத்துவ இயக்குனர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என தமிழக அரசிற்கு பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.இது குறித்து அவர் கூறுகையில் மருத்துவத்துறையில் காலி பணியிடங்கள் இருப்பதால் ஒருவர் பல்வேறு பணிகளை செய்ய வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதனால் அவர்களின் வேலை சுமை மற்றும் பொறுப்பும் அதிகரித்துள்ளது. மருத்துவத்துறையில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.அண்மையில் தான் கொரோனா பரவலின் போது ஒப்பந்த செவிலியர்கள் பணியமர்த்தப்பட்டனர்.அவர்களின் ஒப்பந்த காலம் கடந்த டிசம்பர் மாதமே முடிவடைந்த நிலையில் அவர்கள் பணி நியமனம் வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment