கார் ஓட்ட தெரிந்தால் போதும் ரூ.63000 சம்பளத்துடன் உள்துறை அமைச்சகத்தில் உடனடி வேலை!!

Photo of author

By Divya

கார் ஓட்ட தெரிந்தால் போதும் ரூ.63000 சம்பளத்துடன் உள்துறை அமைச்சகத்தில் உடனடி வேலை!!

Divya

கார் ஓட்ட தெரிந்தால் போதும் ரூ.63000 சம்பளத்துடன் உள்துறை அமைச்சகத்தில் உடனடி வேலை!!

உள்துறை அமைச்சகம்:

உள்துறை அமைச்சகத்தில் காலியாக உள்ள 2 கார் ஓட்டுநர் பணிக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு தற்பொழுது இணையத்தில் வெளியாகியுள்ளது.தகுதியான ஓட்டுநர் உரிமம் வைத்துள்ள நபர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

பணி: கார் ஓட்டுநர் (Staff Car Driver)

*இந்த கார் ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 18 வயது நிரம்பியவர்களாக இருக்க வேண்டும்.அதிகபட்சமாக 56 வயது நிரம்பியிருக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

*கார் ஓட்டுநராக பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட
கல்வி வாரியத்தில் 10 ஆம் வகுப்பு வரை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

*இப்பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.19,900/- முதல் ரூ.63,200 /- வரை சம்பளம் கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு தகுதி மற்றும் பணிபுரிய விரும்பம் இருக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.பிறகு தேவையான ஆவணங்களுடன் பூர்த்தி செய்து கொடுக்கப்பட்ட முகவரிக்கு குறிப்பிடப்பட்டுள்ள கடைசி தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

*இன்று முதல் அடுத்த 59 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

*கார் ஓட்டுநர் பணிக்கான முழு விவரத்தை தெரிந்து கொள்ள https://www.mha.gov.in/sites/default/files/VacancyCircular_30082023.pdf என்ற இணையத்தை பார்வையிடலாம்.