சூரியனை ஆய்வு செய்ய தயாராகும் ஆதித்யா 1 விண்கலம்!!! இன்று தொடங்குகிறது கவுண்டவுன்!!!

0
117

சூரியனை ஆய்வு செய்ய தயாராகும் ஆதித்யா 1 விண்கலம்!!! இன்று தொடங்குகிறது கவுண்டவுன்!!!

இஸ்ரோ மூலமாக சூரியனை ஆய்வு செய்ய விண்ணில் ஏவப்படவுள்ள ஆதித்யா 1 என்ற விணகலத்திற்கான கவுண்டவுன் இன்று(செப்டம்பர் 1) முதல் தொடங்குகின்றது என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ கடந்த ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி சத்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டரை நிலவில் வெற்றிகரமாக நிலை நிறுத்தியது. இஸ்ரோ நிறுவனத்தின் இந்த செயல் சாதனையாக பார்க்கப்பட்டது. நிலவில் வெற்றிகரமாக விண்கலத்தை நிலை நிறுத்திர நாடுகளில் இந்தியா நான்கவது நாடகவும் நிலவின் தென் துருவத்தில் லேண்டரை தரையிரக்கியதில் முதல் நாடாகவும் இந்தியா சாதனை படைத்துள்ளது.

இதையடுத்து சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா 1 என்ற விண்கலத்தை விண்ணுக்கு அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. அதன்படி ஆதித்யா 1 விண்கலத்தை விண்ணுக்கு அனுப்ப இன்று(செப்டம்பர் 1) முதல் கவுன்டன் தொடங்கவுள்ளதாக இஸ்ரோ தகவல் வெளியிட்டுள்ளது.

சூரியனை ஆய்வு செய்ய விண்ணுக்கு அனுப்பப்படும் ஆதித்யா எல் 1 விண்கலம் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டது. பெங்களூரில் உள்ள வான் இயற்பியல் ஆராய்ச்சி மையமும், புனேயில் உள்ள வானியல் ஆராய்ச்சி மையமும் இந்த விண்கலத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகித்துள்ளது.

சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல் 1 விண்கலம் நாளை அதாவது செப்டம்பர் 2ம் தேதி காலை 11.50 மணிக்கு விண்ணில் பாயவுள்ளது. நேற்று(ஆகஸ்ட்31) ஆதித்யா எல் 1 விண்கலத்தின் புகைப்படங்களை வெளியிட்டது.

இதையடுத்து நேற்று(ஆகஸ்ட்31) இஸ்ரோ தலைவர் சோம்நாத் அவர்கள் இது தொடர்பாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் “திட்டமிட்டபடி ஆதித்யா எல் 1 விண்கலம் சூரியனை ஆய்வு செய்வதற்காக செப்டம்பர் 2ம் தேதி விண்ணில் பாயும். இதற்கான கவுன்டவுன் செப்டம்பர்1ம் தேதி முதல் தொடங்கும்”