Immunity Boost Powder: உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் மூலிகை பவுடர்!!

Photo of author

By Divya

Immunity Boost Powder: உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் மூலிகை பவுடர்!!

நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இயற்கையாகவே காணப்படக் கூடியவை.இவை குறைந்தால் உடலில்
காய்ச்சல்,சளி போன்ற நோய்தொற்றுகள் தொற்றி விடும்.எனவே உடலில் இருக்கின்ற நோய் எதிர்ப்பு சக்தியின் அளவை அதிகரிக்க மூலிகை பவுடர் தயாரித்து பயன்படுத்தி வாருங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)சீரகம் – 5 தேக்கரண்டி
2)பெருஞ்சீரகம் – 4 தேக்கரண்டி
3)நாட்டு கொத்தமல்லி விதை – 5 தேக்கரண்டி
4)கரு மிளகு – 2 தேக்கரண்டி
5)பட்டை – 2 துண்டு
6)இலவங்கம் – 3
7)ஏலக்காய் – 5
8)மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி

செய்முறை:-

அடுப்பில் ஒரு வாணலி வைத்து 5 தேக்கரண்டி சீரகம்,4 தேக்கரண்டி பெருஞ்சீரகம் சேர்த்து மிதமான தீயில் 1 நிமிடம் வறுத்து ஒரு தட்டில் கொட்டவும்.

அதன் பின்னர் நாட்டு கொத்தமல்லி,கரு மிளகு போட்டு மிதமான தீயில் வறுக்கவும்.அதன் பின்னர் பட்டை,இலவங்கம் மற்றும் ஏலக்காய் சேர்த்து ஒரு நிமிடம் வறுத்து அடுப்பை அணைக்கவும்.வறுத்த பொருட்கள் அனைத்தையும் நன்கு ஆறவிட்டு ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பவுடர் செய்து கொள்ளவும்.

இந்த பவுடரில் ஒரு தேக்கரண்டி அளவு மஞ்சள் தூள் சேர்த்து கலந்து ஒரு டப்பாவில் கொட்டிக் ஸ்டோர் செய்து கொள்ளவும்.

பயன்படுத்தும் முறை:

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பின்னர் அதில் அரைத்த மூலிகை பொடி ஒரு தேக்கரண்டி அளவு சேர்த்து ஒரு நிமிடம் காய்ச்சி அடுப்பை அணைக்கவும்.

இந்த பானத்தை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி சிறிது தேன் கலந்து குடித்து வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

மற்றொரு தீர்வு:-

தேவையான பொருட்கள்:-

1)எலுமிச்சை தோல் – 10
2)தேன் – தேவையான அளவு

செய்முறை:-

10 எலுமிச்சை பழ தோலை வெயிலில் நன்கு காய வைத்து எடுத்துக் கொள்ளவும்.பிறகு இதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்து ஒரு டப்பாவில் கொட்டி சேமித்துக் கொள்ளவும்.

பிறகு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.இதனை தொடர்ந்து அரைத்த எலுமிச்சை பவுடர் ஒரு தேக்கரண்டி அளவு சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.

இந்த பானத்தை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி சிறிது தேன் சேர்த்து கலந்து குடித்து வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியின் அளவு அதிகரிக்கும்.