100 நாள் வேலையை 150 ஆக உயர்வு தாலிக்கு தங்கம் திட்டத்தை நடைமுறைபடுத்துங்கள்! கோஷமிட்ட மக்கள்!

Photo of author

By Rupa

100 நாள் வேலையை 150 ஆக உயர்வு தாலிக்கு தங்கம் திட்டத்தை நடைமுறைபடுத்துங்கள்! கோஷமிட்ட மக்கள்!

Rupa

Implement the gold scheme for thali to increase 100 days of work to 150! People shouting slogans!

100 நாள் வேலையை 150 ஆக உயர்வு தாலிக்கு தங்கம் திட்டத்தை நடைமுறைபடுத்துங்கள்! கோஷமிட்ட மக்கள்!

தேனி மாவட்டம் பெரியகுளம் வடுகபட்டியில் உள்ள ஒன்றிய குழு அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் மக்கள் திறன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசு அறிவித்த வாக்குறுதிப்படி ஊரக வேலைத் திட்ட வேலை நாட்களை 150 நாட்களாக மாநில அரசு உயர்த்திவிட வேண்டும் எனவும்,தினக்கூலியை மாநில அரசு பங்காக ரூபாய் 100 சேர்த்து 381 ஆக உயர்த்தி முழுமையாக வழங்கிட வேண்டும் எனவும்,காலை 7 மணிக்கு வேலை தளத்திற்கு வர சொல்லி கட்டாயப்படுத்துவது கைவிட வேண்டும் எனவும்,ஊரக வேலைத் திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியை வேறு கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தி வேலைவாய்ப்பை பறிப்பதை கைவிட வேண்டும் என போராட்டம் நடத்தினர்.

மேலும் தாலிக்கு தங்கம் வழங்கும் திருமண உதவி திட்டத்தை தடையின்றி தொடர்ந்து அரசு செயல்படுத்திட வேண்டும் என கேட்டுக்கொண்டனர். மாநில அரசு உடனடியாக அறிவித்தபடி தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் எனக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர்.நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் இளங்கோ, மன்னர்மன்னன், காளிமுத்து, மதன்குமார், செல்லப்பாண்டி, சின்னராமு, மகாராஜன்,அஞ்சலை கோமதி,ஆகியோர் கலந்து கொண்டு வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெகதீஷ் அவர்களிடம் கோரிக்கை மனுவை வழங்கினர்.ஆர்ப்பாட்டத்தை ஒட்டி தென்கரை காவல்துறையினர் பாதுகாப்பணியில் ஈடுபட்டனர்.