அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்களில் தொடங்கிய மாணவர் சேர்க்கை! இணையத்தளம் வழியாகவும் விண்ணப்பிக்கலாம்!

0
65
Admissions to Government Industrial Training Institutes (ITIs) begin! You can also apply via the website!
Admissions to Government Industrial Training Institutes (ITIs) begin! You can also apply via the website!
அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்களில் தொடங்கிய மாணவர் சேர்க்கை! இணையத்தளம் வழியாகவும் விண்ணப்பிக்கலாம்!
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) 2022-ஆம் ஆண்டிற்கான மாணவ மாணவிகள் சேர்க்கை நடைபெறவுள்ளது. அதன்படி, தேனி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், தேனி, அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் (மகளிர்) ஆண்டிப்பட்டி மற்றும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் போடிநாயக்கனூர்
ஆகியவற்றில் மாணவ, மாணவியர்கள் சேர்ந்திட இணையதளம் வாயிலாக
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மாணவ, மாணவியர்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம்
வாயிலாக விண்ணப்பங்கள் பதிவு செய்ய வேண்டும். இணையதளம் வாயிலாக
விண்ணப்பிக்க மாணவ மாணவியர்களுக்கு உதவிடும் வகையில் மாநிலம் முழுவதும்
அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் மாவட்ட திறன்பயிற்சி அலுவலகங்கள்
ஆகியவற்றில் சேர்க்கை உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இம்மையங்களின்
விவரங்கள் மேற்கண்ட இணையதள முகவரியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி எட்டாம் வகுப்பு / பத்தாம் வகுப்பு மற்றும் அதற்கு மேலும் தேர்ச்சி
பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பக்கட்டணத் தொகையான ரூ. 50/- விண்ணப்பதாரர்
Debit Card/Credit Card/Net Banking/G-Pay வாயிலாக செலுத்திட வேண்டும்.
இணையதளம் வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்ய கடைசி நாள் : 20.07.2022 ஆகும்.
மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் இணையதள கலந்தாய்வுக்கான தரவரிசை
பட்டியல் மற்றும் கலந்தாய்வு குறித்த விவரங்கள் கடைசி தேதிக்கு பிறகு இதே
இணையதளத்தில் வெளியிடப்படும். மேலும் தொழிற்பயிற்சி நிலைய சேர்க்கைக்கான
விண்ணப்பத்தினை பூர்த்தி செய்வதில் ஏதேனும் சந்தேகம் ஏற்படும் நேர்வில்
dstothenigmail.com என்ற மின்னஞ்சல் முகவரிலோ அல்லது 70106 65335 அலைபேசி
எண்ணிலோ தொடர்பு கொண்டு பயனடையுமாறு தேனி மாவட்ட ஆட்சித்தலைவர்
. க.வீ.முரளீதரன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.