ஏர் இந்தியாவின் முக்கிய அறிவிப்பு!! புதிதாக மேற்கொள்ளப்படும் உணவு கட்டுப்பாடு!!

Photo of author

By Gayathri

ஏர் இந்தியாவின் முக்கிய அறிவிப்பு!! புதிதாக மேற்கொள்ளப்படும் உணவு கட்டுப்பாடு!!

Gayathri

Important Announcement of Air India!! New food control!!

டாடா குழுமத்திற்கு சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம் உணவு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் சிக்கியுள்ளதால், விமானங்களில் பரிமாறப்படும் உணவுகளில் புதிய கட்டுப்பாடுகளை கொண்டுவந்துள்ளனர்.

ஏர் இந்தியா விமானத்தில் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு என ஹலால் உணவுகள் தனித்தனியே வழங்கப்பட்ட வந்த நிலையில், அதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளதால் இனி இது போன்று இந்து மற்றும் முஸ்லிம்களுக்கு என ஹலால் உணவுகள் வழங்கப்பட மாட்டாது என ஏர் இந்தியா நிறுவனத்தின் உரிமமான டாடா குழுமம் தெரிவித்துள்ளது.

மேலும் குறிப்பாக, இந்த ஆண்டுஜூன் 17 அன்று, விருதுநகர் காங்கிரஸ் எம்.பி. மணிக்கம் தாகூர், ஏர் இந்தியா மத அடிப்படையில் உணவுகளை லேபிளிடுவது குறித்து கவலை தெரிவித்திருக்கிறார். மேலும் இவர் இது குறித்து விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் புகாரையும் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏர் இந்தியா வலைத்தளத்தின் ஸ்கிரீன்ஷாட்டைப் பகிர்ந்த எம்.பி., “இந்து” அல்லது “முஸ்லிம்” உணவு என்றால் என்ன என்று கேள்வி எழுப்பினார். விமானப் போக்குவரத்து அமைச்சகத்திடம் நடவடிக்கை எடுக்கக் கோரிய அவர் , “சங்கிகள் ஏர் இந்தியாவைக் கைப்பற்றியுள்ளார்களா?” என்றும் அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இந்நிலையில் தான், ஏர் இந்தியா நிறுவனமானது இனி தங்களுடைய விமான போக்குவரத்தின் பொழுது இது போன்று ஹலால் உணவுகளை பரிமாற மாட்டோம் என்று தெரிவித்திருக்கிறது.