ரேசன் அட்டை விரல் ரேகை பதிவு குறித்து வெளியான முக்கிய தகவல்..!
குடும்ப அட்டைதாரர்களுக்கு பொது விநியோகத் திட்டத்தின் மூலம் அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை மத்திய மற்றும் மாநில அரசு இணைந்து வழங்கி வருகிறது.
குடும்ப அட்டையில் AAY, PHH, NPHH, NPPH – S என்று நன்கு வகைகள் உள்ள நிலையில் இந்த மாத இறுதிக்குள் ரேசனில் விரல் ரேகை பதிவு செய்யாத குடும்ப உறுப்பினர்களின் பெயர் நீக்கப்பட்டு விடும் என்ற தகவல் தீயாக பரவி வருகிறது.
கடந்த 2020 ஆம் ஆண்டில் அறிமுகமான இந்த பயோமெட்ரிக் முறை மூலம் குடும்ப அட்டைகளுக்கு ரேசன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் ரேசனில் விரல் ரேகை பதிவு செய்வது கட்டாயமாக்கப்படுவதாகவும்… விரல் ரேகை பதிவு செய்யாதவர்களின் பெயர் குடும்ப அட்டையில் இருந்து நீக்கப்பட்டு விடும் என்று பரவி வரும் செய்தி குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்து இருக்கின்றது.
முன்னுரிமை பெற்ற குடும்ப அட்டைதாரர்களின் ஆதார் விவரங்களைச் சரிபார்ப்பதற்காக தான் குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்களின் விரல் ரேகை பதிவு சரிபார்ப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை 63% குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேகை பதிவு சரிபார்ப்பு முடிந்த நிலையில் மீதமுள்ள குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேகை பதிவு சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
மேலும் விரல் ரேகை பதிவு செய்யாதவர்களின் பெயர் குடும்ப அட்டையில் இருந்து நீக்கப்பட்டு விடும் என்று பரவி வரும் செய்தி முற்றிலும் பொய்யானது. விரல் ரேகை பதிவு செய்யாதவர்களின் பெயர் நீக்கப்படாது என்று தமிழக அரசு தெரிவித்திருக்கின்றது.