கார் ஓட்டுபவர்களுக்கு வெளிவந்த முக்கிய தகவல்!!! மத்திய அரசின் புதிய விதிமுறை!!
மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கார் நிறுவனங்களுக்கு மத்திய அரசு புதிய அறிவுறுத்தலை கூறியுள்ளது. சமீப காலமாக விபத்துக்கள் அதிகளவு நடந்து வருகிறது இதனை முடிந்த அளவு கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் மத்திய அரசு புதிய நடவடிக்கைகளை அமல்படுத்தியுள்ளது. அந்த வகையில் இனிவரும் நாட்களில் கார் ஓட்டுபவர்கள் மட்டுமின்றி பின்புறம் அமர்ந்திருப்பவர்களும் கட்டாயம் சீட் அணிய வேண்டும் என தெரிவித்துள்ளது. அதனால் இனி வரும் நாட்களில் கார்களில் பின்புறம் அமருபவருக்கு சீட் பெல்ட் போடும் வகையில் தயாரிக்க வேண்டும் என்றும் அதற்கான எச்சரிக்கை சமிக்ஞையும் பொருத்த வேண்டும் என்றும் கார் நிறுவனங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது.
இந்த புதிய விதிமுறைகளை குறித்து மக்கள் ஏதேனும் கருத்து தெரிவிக்க வேண்டும் என்றால் அக்டோபர் ஐந்தாம் தேதிக்குள் கூறலாம் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதே வேளையில் மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி கூறியது, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் காரில் பயணிக்கும் அனைவரும் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும். சீட் பெல்ட் அணிய தவறினால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.இனி வரும் காலங்களில் மக்கள் அனைவரும் கட்டாயம் சீட்பெல்ட் அணிய வேண்டும்.