பள்ளிகளுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! இந்த தேதி வரை மட்டுமே வகுப்புகள் நடத்த வேண்டும்!

Photo of author

By Parthipan K

பள்ளிகளுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! இந்த தேதி வரை மட்டுமே வகுப்புகள் நடத்த வேண்டும்!

Parthipan K

Important information for schools! Classes should be conducted only up to this date!

பள்ளிகளுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! இந்த தேதி வரை மட்டுமே வகுப்புகள் நடத்த வேண்டும்!

சிபிஎஸ்இ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் சில பள்ளிகள் இந்த கல்வி ஆண்டுக்கான வகுப்புகளை முன்னதாகவே தொடங்கியுள்ளது என தகவல் வந்துள்ளது. குறிப்பிட்ட கால வரையறைக்குள்ளாக ஒட்டுமொத்த படங்களையும் நடத்திவிட வேண்டும் என்று நோக்கத்தில் பள்ளிகள் மேற்கொள்ளும் இந்த நடவடிக்கை அதிக சுமை மற்றும் மனசோர்வு  போன்ற பாதிப்புகளை மாணவர்களுக்கு உருவாக்கம் நிலை உள்ளது.

மேலும் வாழ்க்கை திறன், நன்னெறி கல்வி, சுகாதார மற்றும் உடற்கல்வி பணித்திறன் மேம்பாட்டு கல்வி, சமூக சேவை போன்ற பாடம் சாராத நடவடிக்கைகளில் மாணவர்கள் ஈடுபட முடியாத நிலையில் அதற்கான போதுமான அளவு கால அவகாசம் கிடைக்காத நிலை நிலவி வருகின்றது.

இந்த பாடம் சாராத நடவடிக்கைகளுக்கு கல்வி திட்டத்தில் மிக முக்கியமானதாகும். வகுப்புகளை முன்கூட்டியே தொடங்குவதை பள்ளி முதல்வர்கள் தவிர்க்க வேண்டும். வகுப்புகள் ஏப்ரல் 1ஆம் தேதி தொடங்கி மார்ச் 31ஆம் தேதி நிறைவு செய்ய வேண்டும் என்ற நடைமுறையை அனைத்து பள்ளிகளும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகள் கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு வரும் 21ஆம் தேதியும் 12ஆம் வகுப்பு தேர்வு ஏப்ரல் 5 ஆம் தேதி நிறைவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.