களத்தில் இறங்கிய பன்னீர் செல்வம்!! சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை மறுநாள் விசாரணை!!

0
251
#image_title

களத்தில் இறங்கிய பன்னீர் செல்வம்!! சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை மறுநாள் விசாரணை!!

அதிமுக பொது செயலாளர் தேர்தல் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தரப்பு தயாராகி வரும் நிலையில், கடந்த சனிக்கிழமை பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மனோஜ்பாண்டியன் , வைத்தியலிங்கம், ஜேசிடி பிரபாகரன், ஆகியோர் சென்னை உயர்நிதி மன்றத்தில் அவசர வழக்காக தனித்தனியே தொடுத்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கைநேற்று விசாரித்த உயர்நிதிமன்ற நிதிபதி குமரேஷ்பாபு, அதிமுக பொது செயலாளர் தேர்தலை நடத்தி கொள்ளலாம் ஆனால், மார்ச் 22ம் தேதி பொதுக்குழு சம்பந்தமான வழக்கு விசாரிக்க இருப்பதால், அன்றைய தினம் வரை முடிவுகளை அறிவிக்க கூடாது என நீதிபதி குமரேஷ்பாபு உத்தரவிட்டதை தொடர்ந்து, இன்று பன்னீர்செல்வம் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் தன் முடிவை அறியாமல் அவசர அவசரமாக பொது செயலாளர் தேர்தலை நடத்துவதன் அவசியம் எதற்கு என்று எடப்பாடிக்கு கேள்வி எழுப்பிய நிலையில், இன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் பொது செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்துள்ளார்.

ஏற்கனவே பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் தாக்கல் செய்துள்ள மனுவானது நாளை மறுநாள் புதன்கிழமை விசாரணைக்கு வரும் நிலையில், பன்னீர்செல்வம் அவரது பெயரில் தாக்கல் செய்துள்ள மனுவும் நாளை விசாரிக்கப்படும் என நீதிபதி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

எடப்பாடி பழனிசாமி எந்த வழியில் சென்றாலும், பொது செயலாளர் தேர்தலை நடத்த முட்டுக்கட்டை போடுவோம் என பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.