தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய தகவல்! மக்களே உஷார் நாளை இங்கு ரயில் சேவை இல்லை!

Photo of author

By Parthipan K

தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய தகவல்! மக்களே உஷார் நாளை இங்கு ரயில் சேவை இல்லை!

கொரோனா தாக்கம் அதிகம் காணப்பட்டதால் ரயில் சேவைகள் அனைத்தும் முற்றிலும் நிறுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். அதனால் போக்குவரத்து சேவைகளும் படிப்படியா தொடங்கியது.

மேலும் பேருந்தில் சென்றால் கூட்ட நெரிசலில் கொரோனா பரவல் இருக்கும் என எண்ணி பெரும்பாலானோர் ரயில் சேவையை விரும்பினார்கள். அதனால் ரயில் சேவை அதிகம் பயன்படுத்தப்பட்டது. மேலும் தெற்கு ரயில்வே அவ்வப்போது பயணிகளுக்கு எண்ணற்ற சலுகைகளை வழங்கி வருகின்றது.

இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு வந்த தீபாவளி பண்டிகை முதல் தற்போது நடந்து முடிந்த பொங்கல் பண்டிகை வரை அனைத்து பகுதிகளுக்கும் சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கப்பட்டது. மேலும் ஒரு சில பகுதிகளுக்கு வாரந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றது.

தற்போது தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் கேரளத்தின் கொச்சுவேலியில் இருந்து மத்திய பிரதேசத்தின் இந்தூர் வரை செல்லும் ரயில் சேவை நாளை ரத்து செய்யப்படுகின்றது.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூருக்கு காலை 11.10 மணிக்கு புறப்படும் அதிவிரைவு வண்டி எண் 20931 என்ற ரயில் நாளை இயங்காது. மறுமார்க்கமாக இந்தூரில் இருந்து கொச்சுவேலிக்கு இரவு 9.40 மணிக்கு புறப்படும் அதிவிரைவு வண்டி எண் 20932  என்ற ரயில் வரும் 21 ஆம் தேதி ரத்து செய்யப்படுகின்றது என அறிவிக்கப்பட்டுள்ளது.