சிபிஎஸ்சி மாணவர்களுக்கு முக்கிய செய்தி! உங்க பிளஸ்டூ மதிப்பெண் இப்படிதான் கணக்கிடப்படும்!

0
127

சிபிஎஸ்இ மாணவர்களுக்கான மதிப்பெண் வழங்கும் முறை குறித்த 12 முக்கிய கல்வி அதிகாரிகள் கொண்ட குழு மூலம் மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. அதை உச்சநீதிமன்றம் சரிதான் என்று ஏற்றுக் கொண்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா மிகவும் அதிகமாக பரவி வந்த நிலையில் அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. அதேபோல் மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. மாணவர்களின் உயிர் முக்கியம் என்று கருதி தேர்வு ரத்து செய்யப்பட்டதாக மத்திய அரசு அறிவித்தது. அது மட்டுமின்றி அவர்களுக்கு மதிப்பெண்களை எப்படி வழங்கலாம் என்பது குறித்து 12 முக்கிய கல்வி அதிகாரிகள் கொண்ட குழுவை நியமித்து மத்திய அரசு நிர்ணயித்தது.

மாணவர்களின் 12ஆம் வகுப்பு இடைப்பருவத் தேர்வுகளில் அவர்கள் எடுத்துள்ள மதிப்பெண்களில் 40 சதவீத அளவிற்கும், பதினொன்றாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு இறுதி மதிப்பெண்களின் அடிப்படையில் 30 சதவீத மதிப்பெண்களும் , மீதமுள்ள மதிப்பெண்கள் செய்முறை (அதாவது ப்ராக்டிகல்) தேர்வில் இருந்தும் வழங்கப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்தது.

இந்த மதிப்பீடு முறையை எதிர்த்து பலரும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர் . இந்த வழக்கின் விசாரணை இன்று நீதிமன்றத்திற்கு வந்தது.

அப்பொழுதும் பேசிய நீதிபதிகள் 10, 11, 12ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பிளஸ் 2 மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் இந்த மதிப்பிடும் முறை உச்ச நீதிமன்றம் அங்கீகரிப்பதாக அறிவித்தது. தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் தகுந்த ஆலோசனைக்குப் பிறகே சிபிஎஸ்சி இந்த முடிவை எடுத்ததாகவும் அந்த முடிவில் நீதிமன்றம் தலையிட விருப்பமில்லை என்பதாகவும் தெரிவித்தது.

மேலும் மத்திய அரசு அவர்கள் தரப்பு வாதத்தில் மாணவர்களின் உயிர் விலை மதிப்பற்றது, இந்த இக்கட்டான சூழ்நிலையில் மாணவர்கள் தேர்வு எழுத சென்றால் அவருக்கு கொரோனா தொற்று பரவும் வாய்ப்பு அதிகம் ஏற்படும் என்ற காரணத்தால் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன, என்று கூறிய மத்திய அரசின் முடிவை சரியான முடிவுதான் என்று உச்சநீதிமன்றம் சொல்லி உள்ளது.

Previous articleகுழந்தைகள் உடல் இறந்து மிதக்கும் வரை நின்று பார்த்த கொடூரத் தாய்
Next articleகழக அரசின் உறுதியான நிலைப்பாடு இதுதான்! சட்டமன்றப் பேரவையில் ஸ்டாலின் பேச்சு!