குடும்ப அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு..! இதை செய்யாவிட்டால் இனி ரேசன் பொருட்கள் கிடைக்காது!

Photo of author

By Divya

குடும்ப அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு..! இதை செய்யாவிட்டால் இனி ரேசன் பொருட்கள் கிடைக்காது!

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு ரேசன் கடைகள் மூலம் புழுங்கல் அரிசி, பச்சரிசி, கோதுமை இலவசமாகவும் பருப்பு, சர்க்கரை, பாமாயில் மலிவு விலைக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

மத்திய மற்றும் மாநில அரசு இணைந்து செயல்படுத்தி வரும் இந்த திட்டத்தில் கோடிக்கணக்கான குடும்பங்கள் பயனடைந்து வருகின்றது. தமிழகத்தில் சுமார் 2 கோடிக்கும் அதிகமான குடும்ப அட்டைதாரர்கள் பயனடைந்து வருகின்றனர்.

அதுமட்டும் இன்றி நலத்திட்டங்களை பெற ரேசன் கார்டுகள் அவசியம். இதனால் புதிதாக திருமணம் ஆன தம்பதிகள் உடனடியாக ரேசன் கார்டுக்கு விண்ணப்பிக்கின்றனர்.

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கின்றது. பயோமெட்ரிக் மூலம் குடும்ப அட்டைகளுக்கு பொருட்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில் ரேசன் கார்டில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கைரேகை பதிவு செய்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது.

குடும்ப அட்டையில் உள்ள ஒரு நபரின் கை ரேகை பதிவு தவறினாலும் அடுத்த மாதத்தில் இருந்து அவர்களது பெயர் குடும்ப அட்டையில் இருந்து நீக்கப்பட்டு விடும் என்றும்.. ரேசன் பொருட்கள் வாங்குவதில் சிக்கல் ஏற்படும் என்றும் ரேசன் ஊழியர்கள் எச்சரிக்கை விடுத்து இருக்கின்றனர்.

பிப்ரவரி மாதத்தின் இறுதிக்குள் குடும்ப அட்டையில் பெயர் உள்ள நபர்கள் அனைவரும் ரேசன் கடைக்கு சென்று தங்கள் கை ரேகை பதிவை உறுதி செய்து விட வேண்டும் என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்ட்டு இருக்கின்றது.