வட்டி இல்லாமல் ரூ.5 லட்சம் கடன் கிடைக்கும்.. மத்திய அரசின் இந்த திட்டம் பற்றி தெரியுமா?

0
233
#image_title

வட்டி இல்லாமல் ரூ.5 லட்சம் கடன் கிடைக்கும்.. மத்திய அரசின் இந்த திட்டம் பற்றி தெரியுமா?

நம் இந்திய நாட்டில் பெண்களின் கல்வி மற்றும் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக மத்திய அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது.

பெண்கள் மற்றவர்களை சார்ந்து இருக்காமல் தங்கள் திறமையால் முன்னேற மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டங்களில் ஒன்று லக்பதி திதி. இந்த திட்டத்தை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று பிரதமர் மோடி அவர்கள் அறிமுகப்படுத்தினார்.

பெண்களுக்கு முக்கியதத்துவம் தரும் பல திட்டங்களில் இந்த லக்பதி திதி திட்டமும் ஒன்று. இந்த திட்டத்தின் மூலம் ரூ.5,00,000 லட்சம் வரை வட்டி இல்ல கடன் வழங்கப்பட்டு வருகிறது.

லக்பதி திதி திட்டத்தின் மூலம் கோடிக்கணக்கான பெண்கள் பயனடைந்து வருகின்றனர்.

லக்பதி திதி திட்டத்தில் பயன்பெற இருக்க வேண்டிய தகுதி…

பெண்கள் மட்டுமே இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற முடியும். அதுவும் மகளிர் சுய உதவிக் குழுவில் உள்ள பெண்களுக்கு மட்டும் தான் லக்பதி திதி திட்டம்.

மகளிர் சுய உதவிக்குழு மூலம் தொழில் சார்ந்த பயிற்சிகள் வழங்கப்படும். இந்த பயிற்சிக்கு பிறகு மகளிர் சுய உதவிக் குழுக்கள் தொழில் செய்வதற்கான விரிவான திட்டத்தை தயாரித்து மத்திய அரசுக்கு விண்ணப்பம் செய்ய வேண்டும்.

தங்களது திட்டம் முழு பரிசீலனை செய்யப்பட்ட பின்னர் தகுதி பெற்றால் தொழிலை விரிவு படுத்த ஒவ்வொரு மகளிர் குழுவுக்கும் ரூ.5,00,000 வட்டி இல்லாத கடன் வழங்கப்படும்.

இந்த கடனை வைத்து மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் தங்கள் பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள முடியும்.

லக்பதி திதி திட்டத்திற்கு விண்ணப்பம் செய்யத் தேவைப்படும் ஆவணங்கள்:-

*ஆதார் நகல்
*ரேசன் கார்டு நகல்
*பான் கார்டு நகல்
*தொலைபேசி எண்
*வங்கி கணக்கு விவரம்
*பாஸ்போர்ட் சைஸ் போட்டோ
*ஆண்டு வருமானம் குறித்த விவரம்