வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு!..போக்குவரத்து கட்டணங்களை உயர்த்த தமிழக அரசு முடிவு!..

0
244
Important notice for motorists!.. Tamil Nadu government has decided to increase the transport charges!..
Important notice for motorists!.. Tamil Nadu government has decided to increase the transport charges!..

வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு!..போக்குவரத்து கட்டணங்களை உயர்த்த தமிழக அரசு முடிவு!..

சென்னையில் வாகனப் பதிவு, ஓட்டுநர் உரிமம் வழங்குதல் உள்ளிட்ட போக்குவரத்து சேவைகளுக்கான கட்டணங்களை தமிழக அரசு 10 மடங்கு உயர்த்தியுள்ளது. இதற்காக மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் செய்வதற்காக கடந்த ஜூலை 25 ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான கருத்துக்களை தெரிவிக்க 30 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.மேலும் இந்த அவகாசம் முடிந்ததும் புதிய கட்டணங்களை அமல்படுத்த தமிழக அரசு ஒரு முடிவு செய்துள்ளது. அதன்படி தற்காலிக வாகனப் பதிவு, தற்காலிகப் பதிவு நீட்டித்தலுக்கான கட்டணம் 50 ரூபாயிலிருந்து 200 ரூபாயாகவும் வேறு மண்டலங்களில் வாகன தகுதிச்சான்று கட்டணமாக 500 ரூபாயும், தகுதிச்சான்று நகல் பெறுவதற்கு 250 ரூபாயும்அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன் இந்த தகுதிச்சான்று பெற கட்டணம் வசூலிக்கப்படவில்லை. மேலும் தகுதிச்சான்று பெறாத வாகனங்களை திரும்பப் பெறுவதற்கான சி.எஃப்.எக்ஸ் நோட்டீஸ் வழங்கப்படும் போது 30 ரூபாய் கட்டணம் கண்டிப்பாக  செலுத்த வேண்டும்.தற்போது இந்த கட்டணமும்  500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மோட்டார் வாகன ஆய்வாளர் அல்லது பதிவு அதிகாரியின் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய இருந்த 40 ரூபாய் கட்டணம் 500ரூபாயாகவும்  வாகன ஆவணங்களுக்கான சான்றளிக்கப்பட்ட நகல் பெறுவதற்கு 75 ரூபாய்க்கு பதில் 400 ரூபாயாக  கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வாகனச் சோதனை மையங்களுக்கான அனுமதிக் கட்டணம் 1000 ரூபாயிலிருந்து  ஐந்தாயிரம் ரூபாய் ஆகவும், அனுமதியைப் புதுப்பிக்கும் கட்டணம் ரூபாய் 500 லிருந்து ரூபாய் 3 ஆயிரமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. புதுப்பித்தலுக்கான விண்ணப்பம் தாமதமாக சமர்ப்பித்தால் 200ரூபாய்.மேலும் போக்குவரத்து ஆணையரின் உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டுக்கான கட்டணம்100 ரூபாயிலிருந்து 500ரூபாயாகவும் உயர்த்தி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வாகனச் சோதனை மையங்களுக்கான அனுமதிக் கட்டணம் ரூபாய் 1000 த்திலிருந்து ரூபாய் 5 ஆயிரமாகவும் அனுமதியைப் புதுப்பிக்கும் கட்டணம் ரூபாய் 500லி ருந்து ரூபாய் 3 ஆயிரமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு இம்மாதம் இறுதியில் அமலாக்கப்படும் என போக்குவரத்துத் துறை தரப்பில் கூறப்படுகிறது.இதனை வாகன ஓட்டிகள்மற்றும் போக்குவரத்து அதிகாரிகள்  கருத்தில் கொண்டு செயல்படுமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.

Previous articleநர்சரிகளின் கவனத்திற்கு! சென்னை உயர்  நீதி மன்றம் அதிரடி உத்தரவு!
Next articleமக்களின் பிரச்சனைகள் அனைத்தும் இந்த 15 நாட்களுக்குள் தீர்வு! ஸ்டாலினின் அதிரடி உத்தரவு!