நர்சரிகளின் கவனத்திற்கு! சென்னை உயர்  நீதி மன்றம் அதிரடி உத்தரவு!

0
85

நர்சரிகளின் கவனத்திற்கு! சென்னை உயர்  நீதி மன்றம் அதிரடி உத்தரவு!

தமிழக வனப்பகுதியில் அதிக அளவு அந்நிய மரகன்றுகள் வளர்பதாக அதிக அளவில் குற்றசாட்டுகள் எழுந்து வந்துள்ள நிலையில் இதை தொடர்ந்து   தமிழக வனப்பகுதியில் அந்நிய மரகன்றுகளை வளர்க்க கூடாது என உத்தரவிட கோரி சென்னை உயர்  நீதி மன்றத்தில்   மனு தொடரப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சதிஷ் குமார் ,பரத் சக்கரவர்த்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.  அந்த விசாரணையில் தமிழக அரசுக்கு சென்னை உயர்  நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

அந்த உத்தரவில் அந்நிய மரகன்றுகளை விற்க நர்சரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது.இந்த தடை உத்தரவினை அறிவிப்பாக அனுப்ப வேண்டும் என நீதிபதிகள் குறிப்பிட்டிருந்தனர்.அத்துடன் அந்நிய மரங்களை அப்புறப்படுத்தும் பணியை தமிழ்நாடு காகித நிறுவனத்திடம் ஒப்படைப்பது குறித்து இரண்டு வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என நீதிபதிகள் கூறினார்கள்.

மேலும் வனப்பகுதிகளில் அந்நிய மரங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு தகவல் தெரிவித்துள்ளது.700 ஹெக்டர் பரப்பில் இருந்த அந்நிய மரங்களை அகற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

author avatar
Parthipan K