மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. பொதுத் தேர்வு தேதியில் மாற்றம்..? அமைச்சரே சொன்ன தகவல்!!

0
260
#image_title

மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. பொதுத் தேர்வு தேதியில் மாற்றம்..? அமைச்சரே சொன்ன தகவல்!!

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளின் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி நடப்பு கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் கடந்த நவம்பர் மாதம் வெளியிட்டு இருந்தார்.

பொதுத்தேர்வு அட்டவணைப்படி,

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு வருகின்ற பிப்ரவரி மாதம் 12 ஆம் தேதி நடைபெறு நடைபெற விருக்கிறது. பொதுத் தேர்வு மார்ச் மாதம் 01 ஆம் தேதி தொடங்கி மார்ச் மாதம் 22 ஆம் தேதி நிறைவு பெறுகிறது. பொதுத் தேர்வு ரிசல்ட் மே 6 ஆம் தேதி வெளியிடப்பட இருக்கிறது.

11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி நடைபெற விருக்கிறது. பொதுத் தேர்வு மார்ச் மாதம் 04 ஆம் தேதி தொடங்கி மார்ச் மாதம் 24 ஆம் தேதி நிறைவு பெறுகிறது. பொதுத் தேர்வு ரிசல்ட் மே 14 ஆம் தேதி வெளியிடப்பட இருக்கிறது.

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு பிப்ரவரி மாதம் 23 ஆம் தேதி நடைபெற விருக்கிறது. பொதுத் தேர்வு மார்ச் மாதம் 26 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 8 ஆம் தேதி நிறைவு பெறுகிறது. பொதுத் தேர்வு ரிசல்ட் மே 10 ஆம் தேதி வெளியிடப்பட இருக்கிறது. என்று அட்டவணையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

ஆனால் இந்த மாத தொடக்கத்தில் வட தமிழகத்தில் மிக்ஜாம் புயல், அடுத்து தென் தமிழக்தில் பேய் மழை புரட்டி போட்டு இருப்பதால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. மழை வெள்ளத்தில் மாணவர்களின் பாட புத்தகங்கள் அடித்து செல்லப்பட்டதால் தேர்வுக்கு தயராக முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.

இதனால் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பொதுத்தேர்வு தேதியில் மாற்றம் கொண்டு வர வேண்டுமென்று பெற்றோர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, பொதுத் தேர்வு தேதியில் எந்த மாற்றமும் இல்லை. திட்டமிட்டபடி தேர்வு நடைபெறும். மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் பள்ளி மாணவர்களுக்கு தேவையான படபுத்தகங்கள் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்து இருக்கிறார்.

Previous article1 ரூபாய் சம்பளமா? NSK – வின் வில்லத்தனம்! கருணாநதியின் செயல்
Next articleதேசிய விருதுக்கு பெயர்போனவரின் இயக்கத்தில் நடித்த எம்ஜிஆர்! படம் வெற்றி அடைந்ததா? எந்த படம்?