1 ரூபாய் சம்பளமா? NSK – வின் வில்லத்தனம்! கருணாநதியின் செயல்

0
632
#image_title

 

கருணாநிதி வசனம் எழுதி மந்திரி குமாரி நாடகத்தை பார்த்து வியந்த மாடர்ன் தியேட்டர்ஸ் டி ஆர் சுந்தரம் அவர்கள் அவர்களிடமே வேலை பார்க்கும் படி கூறியுள்ளார்.

 

கருணாநிதி வசனம் எழுதி முதலில் திரையிடப்பட்ட படம் எம்ஜிஆர் நடித்த ராஜகுமாரி. அந்தப் படம் வெளியாகும் பொழுது கருணாநிதியின் பெயர் இந்த எடத்திலும் குறிப்பிடவில்லை.  அதனால் மிகவும் விரக்தி அடைந்துள்ளார் கருணாநிதி

 

தமிழ் சினிமா உலகிலும் அரசியல் வாழ்க்கையிலும் தனக்கென்று ஒரு இடத்தை பெற்றவர் கருணாநிதி. இவ்வளவு போராட்டங்களை சந்தித்த பிறகு தான் அவருக்கு சினிமாவிலும் சரி அரசியலிலும் சரி நல்ல பெயர் கிடைத்துள்ளது. அப்படி சினிமாவிற்கு வருவதற்கு முன் ஏகப்பட்ட தடங்கல்களை அவர் சந்தித்துள்ளார்.

 

1957 ஆம் ஆண்டு எம்ஜிஆர் நடித்த ராஜகுமாரி என்கின்ற படத்தில் வசனகர்த்தாவாக அறிமுகமானவர் கருணாநிதி. அந்தப் படம் வெளியானது. ஆனால் வசனகர்த்தாவின் பெயரான கருணாநிதியின் பெயரை எங்குமே குறிப்பிடவில்லை.

 

அப்படி விரக்தி அடைந்த கருணாநிதி சொந்த ஊருக்கே சென்று இருக்கிறார். அப்பொழுது தானே வசனம் எழுதிய மந்திரிகுமாரி என்ற நாடகத்தை தனது கிராமங்களில் உள்ள பக்கத்து கிராமங்களில் நாடகங்களாக நடத்தி வெளியிட்டு வந்திருந்தார்.

 

நாடகங்களில் மிகவும் பிரியமுள்ள மாடர்ன் தியேட்டர்ஸ் உரிமையாளர் ஆன டி ஆர் சுந்தரம் இந்த மந்திரிகுமாரி என்ற நாடகத்தை பார்த்துள்ளார். பார்த்த அவருக்கு மிகவும் இந்த நாடகம் பிடித்து விட்டது அதில் எழுதிய வசனங்கள் மிகவும் பிடித்திருந்தது.

 

இந்த கதையை எப்படியாவது படம் ஆகிவிட வேண்டும் என்று கருணாநிதியிடம் பேசி உள்ளார் மாடர்ன் தியேட்டர் உரிமையாளர் டி ஆர் சுந்தரம். கதையை கொடுக்க முடிவு செய்த கருணாநிதியையே திரைக்கதை மற்றும் வசனகர்த்தாவராக இருக்கச் சொல்லி அவருக்கு மாத சம்பளம் ரூ 500  கொடுக்கப்பட்டுள்ளது. டி ஆர் சுந்தரத்தின் இயக்கத்தில்  எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான மந்திரி குமாரி திரைப்படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

 

படத்தை பார்க்க என் எஸ் கே சென்னையிலிருந்து சேலம் வந்திருக்கிறார். மந்திரிகுமாரி படத்தை பார்த்த என்எஸ்கே விற்கு இந்த படம் மிகவும் பிடித்திருந்தது. வசனங்கள் அவரை அப்படியே ஈர்த்துள்ளது. இந்த வசனங்களை எழுதியவர்கள் யார் என்று விசாரித்த பொழுது அப்பொழுதுதான் கருணாநிதி என்ற பெயர் வந்துள்ளது.

 

அப்படி என் எஸ் கே கருணாநிதியை சந்தித்து எனது அறைக்கு வர முடியுமா? என்று சொல்லி அவர் கேட்க கருணாநிதி ஒப்புக்கொள்கிறார்.

 

என் எஸ் கே வின் அறைக்குச் சென்ற பிறகு NSK கருணாநிதியை மிகவும் பாராட்டியுள்ளார். இந்தப் படத்தின் வசனங்கள் மிக கூர்மையாகவும் அற்புதமாகவும் மனதில் பதியும் வண்ணமும் உள்ளது. இந்த திரைப்படம் மிகவும் நன்றாக இருக்கிறது அதற்கு காரணம் உங்கள் வசனங்களும் காரணம் என பாராட்டியுள்ளார். அதற்கு கருணாநிதியும் நன்றியை தெரிவித்துள்ளார்.

 

உடனே என் எஸ் கே நான் மணமகள் என்ற படத்தை எடுப்பதாக உள்ளேன். அந்த படத்திற்கு நீங்கள் வசனம் எழுதி தர முடியுமா? என்று கருணாநிதியை கேட்டுள்ளார் என் எஸ் கே.  மிகவும் மகிழ்ச்சி அடைந்த கருணாநிதி எழுதி தருகிறேன் என்று ஒப்புக்கொண்டுள்ளார்.

 

உடனே  என் எஸ் கே எவ்வளவு இதற்கு சம்பளம் கேட்கிறீர்கள் என்று கருணாநிதியிடம் கேட்கிறார். எனது திறமைக்கு ஏற்ப நீங்கள் சம்பளம் கொடுத்தால் போதும். நான் சம்பளமாக யாரிடமும் கேட்பதில்லை என கருணாநிதி சொல்கிறார்.

 

அதற்கு  என் எஸ் கே குறும்புத்தனமாக ஒரு துண்டு சீட்டில் 00001 எழுதி அவரிடம் தருகிறார். அதைப் பார்த்த கருணாநிதி வியந்து போக அதைப் பார்த்து புன்முறுவல் விடுகிறார் என் எஸ் கே.

 

கருணாநிதி ஆம் ஒப்புக்கொள்கிறேன் என்று அந்த துண்டு சீட்டை திருப்பி 10 ஆயிரம் என்று வரும்படி திருப்பி காட்டியுள்ளார். அவரது புத்திசாலித்தனம் பிடித்துப் போகவே மற்றும் வசனங்கள் அவரை ஈர்க்கவே பத்தாயிரம் சம்பளத்தை கொள்கிறார் என் எஸ் கே.

 

என் எஸ் கே வின் வீட்டு மாடியிலேயே தங்குவதற்கு கருணாநிதிக்கு இடம் கொடுத்து வசனங்களை எழுதி தரச் சொல்லி இருக்கிறார் என் எஸ் கே. கருணாநிதியும் வசனங்களை எழுதி எழுதி காகிதங்களை சிதறவிட்டிருக்கிறார். அப்படி சிதற விட்டிருந்த காகிதங்கள் ஒரு கட்டத்தில் மிகவும் அழகாக அடுக்கப்பட்டிருந்தது. எப்படி என திரும்பிப் பார்க்கையில் அங்கு என் ஸ் கே பொன்முறுவலோடு நின்று கொண்டிருந்திருக்கிறார். அந்த காலத்தில் கருணாநிதியை என் எஸ் கே மிகவும் மரியாதையாக நடத்தியுள்ளார். இதற்கு அவரது வசனங்களும் அவரது புத்திசாலித்தனமும் காரணம்.

author avatar
Kowsalya