2024 ல் உலகம் ஒரு பெரிய மாற்றத்தை சந்திக்கும்!! பல்கேரிய தீர்க்கதரிசி பாபா வங்கா கணிப்பு!!

Photo of author

By CineDesk

2024 ல் உலகம் ஒரு பெரிய மாற்றத்தை சந்திக்கும்!! பல்கேரிய தீர்க்கதரிசி பாபா வங்கா கணிப்பு!!

பல்கேரிய நாஸ்டர் டாமஸ் என்ற பாபா வங்கா பல்கேரியாவில் உள்ள சோபியா பகுதியில் வசித்து வந்தார். இவர் கடந்த 1996 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பதினோராம் தேதி இயற்கை எய்தினார்.

இவர் உயிரோடு இருக்கும் போது உலகத்தில் இதெல்லாம் நடக்கும் என்று இவர் கணித்து கூறியதில் இதுவரை 85 சதவிகிதம் உண்மையாக நடந்துள்ளது.

அதில், குறிப்பாக பிரிட்டன் நாட்டு இளவரசி டயானா மரணம் இவர் கூறியதை போலவே நடந்தது. மேலும், சோவியத் யூனியன் தலைப்பு, அமெரிக்காவின் இரட்டைக் கோபுர தாக்குதல் முதலிய சம்பவங்கள் பாபா வங்கா கூறியதை போலவே நடந்தது.

அந்த வகையில், அடுத்து வரக்கூடிய 2024 ஆம் ஆண்டில் உலகமே ஒரு பெரிய மாற்றம் அடையும் என்று இவர் கூறி இருந்தார்.அதேப்போல குவாண்டம் கணினிகள் வளர்ச்சியில் மிகப்பெரிய முன்னேற்றம் நடக்கும் எனவும் கூறி இருந்தார்.

மேலும், ரஷ்ய நாட்டு அதிபர் அந்த நாட்டை சேர்ந்த ஒருவரால் கொல்லப்படுவார்.ஐரோப்பாவில் தீவிரவாதிகளின் தாக்கம் அதிகரிக்கக்கூடும். உலகில் பெருமளவில் பொருளாதார நெருக்கடியை சந்திக்கும்.

அடுத்ததாக அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் வருகிற 2024 ஆம் ஆண்டில் மர்மமான ஒரு நோயால் பாதிக்கப்பட்டு தனது கேட்கும் திறனை இழந்து, மூளையில் அவருக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என்று கூறி இருந்தார்.

எனவே, பல்கேரிய தீர்க்கதரிசி பாபா வங்கா 2024 ஆம் ஆண்டு இதெல்லாம் நடக்கும் என்று கூறியது தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.